தலைநகரில் ஆம்ஆத்மி தோல்விமுகம்

புதுடில்லி : லோக்சபா தேர்தல் முடிவுகளில் டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வே முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளும் கட்சியான ஆம்ஆத்மி.,யும், பல காலமாக ஆண்ட கட்சியான காங்., ம் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் வரவில்லை.
டில்லியில் ஆம்ஆத்மி 2வது இடத்திலும், காங்., 3வது இடத்திலும் இருந்து வருகின்றன. வடகிழக்கு டில்லி தொகுதியில் டில்லி முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் 2வது இடத்திலேயே இருந்து வருகிறார். பா.ஜ.,வின் மனோஜ் திவாரி 29,000 க்கும் அதிகமான ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
ஆம்ஆத்மி கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பா.ஜ.,வின் கிழக்கு டில்லி வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பிர் முன்னிலையில் இருந்து வருகிறார். டில்லியில் 7 இடங்களையும் பிடிப்போம் எனவும், ஆம்ஆத்மி - காங் இடையே தான் போட்டி எனவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறி வந்தார். அவரது கணிப்பை பொய்யாக்கி பா.ஜ., அனைத்து தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)