மம்தா கோட்டையை தகர்த்த மோடி

கோல்கட்டா : திரிணாமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை பா.ஜ., தகர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை திரிணாமுல் காங், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்., க்கு தான் செல்வாக்கு அதிகம். 2014 லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்., 34 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த முறை மம்தாவின் செல்வாக்கை உடைக்க மேற்குவங்கத்தில் அமித்ஷாவும், மோடியும் தீவிர பிரசாரம் செய்தனர்.
அமித்ஷாவின் பிரசாரத்தை தடுப்பதற்காக பல பகுதிகளில் பிரசாரம் நடத்த மம்தா அரசு அனுமதி மறுத்தது. ஆனால் மோடியின் பிரசாரத்தை மம்தாவால் தடுக்க முடியவில்லை. இதனால் மம்தாவுக்கும், மோடிக்கும் வார்த்தை போரே நடந்தது.
இந்நிலையில் இன்று வெளியான முடிவுகளின் படி, ஆளும் கட்சியான திரிணாமுல் காங் 25 இடங்களில் முன்னிலையில் இருந்தாலும், பா.ஜ., 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேற்குவங்கத்தில் பா.ஜ.,வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என மம்தா பிரசாரத்தின் போது முழக்கமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)