மீண்டும் மோடியா?: கலக்கத்தில் பாக்.,

இஸ்லாமாபாத் : இந்தியாவின் பிரதமராக மீண்டும் மோடி வருவதை பாக்., மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டு டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. கருத்துக் கணிப்புகள் பா.ஜ., வுக்கு சாதகமாக கூறப்பட்டிருந்தாலும் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதையும், மோடி மீண்டும் பிரதமராவதையும் தடுக்க இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. நாளை வெளியாக உள்ள இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகளை உற்று கவனிக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது பாகிஸ்தான்.பாக்., பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு பிறகு இந்தியா மீது பயத்தில் உள்ளது பாகிஸ்தான். பாக்.,ல் வசிக்கும் பலரின் உறவினர்கள் இந்தியாவில் உள்ளனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் ஏற்பட்டுள்ள பீதியின் எதிரொலியாக இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதை பாக்.,ல் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என அந்நாட்டு டிவி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் சிலரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.பாக்.,ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதால் மோடி மீண்டும் வர கூடாது என ஒரு சிலரும், பெரும்பான்மையுடன் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை நம்பவில்லை. அப்படி வராமல் இருப்பது தான் பாக்.,க்கு நல்லது என சிலரும் கூறி உள்ளனர். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா - பாக்., இடையே மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்கான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)