தேர்தல் முடிவு : சிறப்பம்சங்கள்

புதுடில்லி : ஏப்ரல் 18 ம் தேதி துவங்கிய லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19 ம் தேதி நிறைவடைந்துள்ளது. லோக்சபா தேர்தல், 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன.

தேர்வுகள் முடிவுகள் குறித்த சிறப்பம்சங்கள் :
* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என பெரும்பாலான கருத்துகணிப்புக்கள் வெளியான 2 நாட்களில், ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை சரி பார்த்த பிறகே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை எண்ண வேண்டும் என தலைமை தேர்தல் கமிஷனிடம் 22 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று (மே 21) மனு அளித்துள்ளன.
* அதே சமயம், 100 சதவீத ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று தள்ளுபடி செய்துள்ளது
* சுப்ரீம் கோர்ட்டை தொடர்ந்து, தேர்தல் கமிஷனும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
* லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அளிப்பதற்காக யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய கூகுள் இந்தியாவும், பிரசார் பாரதியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனை, காங்., வலியுறுத்தி உள்ளது.
* மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இரவோடு இரவாக மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் தவறானது எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
* ஒரு சுற்று நிலவரம் வெளியிடுவதற்கும், அடுத்த சுற்று முடிவு வெளியிடுவதற்கும் இடையே 30 நிமிடங்கள் அவகாசம் ஆகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)