தோல்வியை ஏற்று கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு பாஜ அறிவுரை

புதுடில்லி: ஓட்டு எண்ணும் இயந்திரங்கள் மீது குறை சொல்லும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தேர்தல் தோல்வியை ஏற்று கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மம்தா பானர்ஜி தொடர்ந்து இரண்டு முறை மே.வங்க முதல்வராகும் போதும், பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவி ஏற்கும் பேதும், சந்திரபாபு நாயுடு வெற்றி பெறும்போதும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சிறப்பாக உள்ளன. ஆனால், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தில், நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு வந்தால், ஓட்டு இயந்திரத்தைநம்ப முடியாது என்கின்றனர். எதிர்க்கட்சியினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் தோல்வியை ஏற்ற கொள்ள வேண்டும்.4வது கட்ட தேர்தல் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் வெற்றி பெற போவதில்லை என்பதையும், பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிப்பதையும் தெரிந்து கொண்டனர். இதனால், தோல்விக்கான காரணத்தை தேடி கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறுகையில், தேர்தல் தோல்வியை தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள், அதற்கான காரணத்தை தேடி வருகின்றன என்றார்.



பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் கூறுகையில், தேர்தலில் படுதோல்வி அடைவோம் என தெரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள், அதற்கான காரணத்தை தேடி வருகின்றன. அவர்களுக்குள் ஏற்பட்ட அவநம்பிக்கை ஆச்சர்யம் அளிக்கவில்லை. அவர்கள் மாநில தேர்தலில் வெற்றி பெறும்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது. ஆனால், தோல்வியை சந்திக்கும் போது கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவான தீர்ப்பை அவமதிப்பது, இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாகும் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)