அ.ம.மு.க.,வினருக்கு தினகரன் அறிவுரை

சென்னை:'ஓட்டு எண்ணிக்கையின் போது, விழிப்போடு இருக்க வேண்டும்' என, அ.ம.மு.க.,வினருக்கு, அக்கட்சி பொதுச் செயலர், தினகரன் அறிவுரை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:'அ.ம.மு.க., அபார வெற்றி' என்று, அதிகாரபூர்வமாக அறிவிக்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக, ஊடகங்கள் வாயிலாக, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிட செய்தவர்கள், இப்போது, அடுத்த காரியத்தையும், கூசாமல் செய்துள்ளனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ற பெயரில், பொய் புரட்டை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மோசடியான கருத்து கணிப்புகளை, மக்கள் நம்பத் தயாராக இல்லை. நம் கட்சியினரும், இதை புறந்தள்ள வேண்டும். நம் கட்சி தொண்டர்கள் மத்தியில், ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தி, ஓட்டு எண்ணும் மையங்களில், தங்களின் அதிகார சித்து விளையாட்டுகளை ஆடலாமா என்ற நப்பாசை தான், இந்த கருத்துக்கணிப்புகளின் பின்னணி.எனவே, வரும், 23ல், கட்சியினர், இரு மடங்கு விழிப்போடு இருக்க வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)