கருத்துக் கணிப்புக்கு காங்., அழகிரி எதிர்ப்பு

சென்னை:''பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு ஏற்புடையதாக இல்லை; நம்பகத்தன்மையும் இல்லை,'' என, தமிழககாங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.
அவரது பேட்டி:கருத்துக் கணிப்பு என்ற பெயரில், தவறான தகவலை பரப்பி உள்ளனர். இது, மக்களை திசை திருப்பும் முயற்சி. மத்தியில், மோடி இல்லாத, மதச்சார்பற்ற அரசு தான் அமையும். தோல்வி பயம் காரணமாகவே, பிரதமர் மோடி வெறுமையான மனதுடன், இமயமலை சென்றுள்ளார்.கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது. ஆனால், காங் கிரஸ் தலைமையில் தான், மத்திய அரசு அமைந்தது.சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும், பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை, மோடி தன் ஏஜன்டாக, கைக்குள் போட்டுள்ளார்.
ஓட்டு எண்ணிக்கையின் போது, கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். கருத்துக் கணிப்பு, 386 லோக்சபா தொகுதிகளில் தான் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமே, 11 ஆயிரம் பேரிடம் தான் கருத்து கேட்டுள்ளனர்.அதாவது, ஒரு தொகுதிக்கு, 28 பேரிடம் தான் கருத்து கேட்கப்பட்டுள்ளது. எனவே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள, கருத்துக் கணிப்பு ஏற்புடையதாகவும் இல்லை; நம்பகத் தன்மையும் இல்லை.தமிழகத்தில், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை, நந்தனத்தில், என் வீட்டில், பல வண்ணத்தில் குடிநீர் வருகிறது. அதை குடித்தால், பல்வேறு நோய்கள் வரும். நெய்வேலி, வீராணம், செங்கல்பட்டு ஏரிகளிலிருந்து, சென்னைக்கு குடிநீர் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அழகிரி கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)