கருத்து கணிப்பு: கணித்ததும்... பலித்ததும்

புதுடில்லி: இந்தியாவில் கருத்து கணிப்பு வெளியிடும் நடைமுறை 1980 களில் தொடங்கின. கடந்த நான்கு லோக்சபா தேர்தல்களை எடுத்துக்கொண்டால், 1998, 2014 ல் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஒரளவுக்கு சரியாக இருந்தது. 2004, 2009 ல் தோல்வியடைந்தன. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 340 இடங்களிலும், பா.ஜ., தனித்து 291 இடங்களிலும் வெல்லும் என ' டுடே சாணக்யா' கணித்தது. இது 98 சதவீதம் சரியாக அமைந்தது. தேர்தல் முடிவில் பா.ஜ., கூட்டணி 336 இடங்களில் வென்றது. பா.ஜ.,282 இடங்களில் வென்றது.

தி.மு.க.,வுக்கு வாய்ப்புதமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 19 தொகுதிகளில் தி.மு.க.,வும், 6 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 14 தொகுதிகளில் இழுபறி எனவும், 'தந்தி டிவி'யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)