பிரதமர் மோடிக்கு மம்தா உறவினர் நோட்டீஸ்

கோல்கட்டா: தன்னை பற்றி முற்றிலும் உண்மைக்கு மாறான கருத்துகளை தெரிவித்த காரணத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யும் மம்தாவின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசில், 36 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலக முகவரிக்கும், பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்ட அந்த நோட்டீசில், உங்களின் கட்சி தொண்டர்களை உற்சாகபடுத்துவதற்காகவும், அவர்களின் சார்பிலம், சரிபார்க்கப்படாத, பரபரப்பான, தவறான தகவலை தெரிவித்ததற்காக, எனது கட்சிக்காரர் சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. உங்கள் பேச்சை கேட்ட மக்களை, தவறாக வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும், எனது கட்சிக்காரர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், நீங்கள் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்தீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே 15ம் தேதி டயமண்ட் ஹார்பர் பகுதியில் நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், திரிணமுல் ஆட்சியில், மாநிலம் பல்வேறு தொந்தரவுகளை சந்தித்து வருகிறது. பா.ஜ., சார்பில், அக்கட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மே.வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் குண்டர்கள், மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டனர் என்றார்.நோட்டீஸ் தொடர்பாக மேற்கு வங்க மாநில பா.ஜ., துணை தலைவர் ஜெய்பிரகாஷ் மஜூம்தார் கூறுகையில், இன்று(மே.19) கடைசி கட்ட தேர்தல் நடக்க உள்ளது. தற்போது நோட்டீஸ் அனுப்பியதற்கு, தோல்வி பயம் காரணம் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)