இதெல்லாம் சகஜமப்பா...: சுனில் அரோரா

புதுடில்லி : தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசாவின் கடித விவகராம் மற்றும் கருத்து வேறுபாடு பற்றி விளக்கமளித்த தலைமைதேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கருத்துவேறுபாடு சகஜம் என்று தெரிவித்துள்ளார்.

நேரமில்லை :



இன்று அசோக் லவாசாவின் கடித விவகாரம் குறித்து அரோரா கூறுகையில், '' தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பான ஒன்று. 3 பேர் இருக்குமிடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வை இருக்கலாம்.அனைவரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. எந்தப் புகார் குறித்தும் நான் பொது விவாதத்திற்கு, எந்த ஒரு இடத்திலும் தயாராகவே உள்ளேன். இது தேர்தல் காலம் என்பதால், அதற்கான நேரமில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

அசோக் லவாசா ;



முன்னதாக தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ''மோடி மற்றும் அமித்ஷா மீதான 6 புகார்களிலும், தனது கருத்து மதிக்கப்படாததால், இனிமேல் நான் தேர்தல் ஆணைய கூட்டங்களில் கலந்துகொள்வதில் அர்த்தமில்லை,'' என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)