மக்கள் என் பக்கம்: பிரதமர் மோடி

புதுடில்லி: மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முழு மெஜாரிட்டிபிரதமர் மோடி டில்லியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பண்டிகை போல், கிரிக்கெட் போல், தேர்தலும் திருவிழா போல் நடக்கிறது. ஜனநாயகத்தை நாம் இணைந்து கொண்டாடுவோம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 2 தேர்தலின் போது, பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. மத்தியில் வலிமையான அரசு அமையும் போது, பிரிமியர் லீக் கிரிக்கெட், பள்ளி தேர்வுகள் போன்றவை அமைதியாக நடந்தன. நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இரண்டாவது முறையாக எங்களது அரசு முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர உள்ளது.

மக்கள் தயார்மக்கள் ஏகோபித்த ஆதரவு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்.தேஜ கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் விருப்பப்படுகின்றனர். பல பகுதிகளில் பிரசாரத்திற்கு சென்ற போது, 5 ஆண்டு ஆட்சிக்கு நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம். கடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழந்தனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தல் பிரசாரம் பெரிய அளவில் இருந்தது.இந்த பிரசாரத்தில், என்னுடைய ஒரு கூட்டம் கூட ரத்து செய்யப்படவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர். என்னை ஆசிர்வதித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)