மீண்டும் தாமரை மலரும்: அமித்ஷா

புதுடில்லி: வரும் தேர்தல் முடிவில் பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் என பா.ஜ., தலைவர் அமித்ஷா இன்று அளித்த பேட்டியில் கூறினார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இணைந்து டில்லி பா.ஜ., அலுவலகத்தில் அளித்த பேட்டியில் அமித்ஷா கூறியதாவது:

லோக்சபா தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளோம். நாடு முழுவதும், பிரதமர் மோடி 142 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கடந்த 2014 ல் மக்கள் அளித்த ஆதரவுடன் வரலாற்று வெற்றி பெற்றோம். மீண்டும் மோடி அரசு மத்தியில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. 2014 ல் சட்டசபையை விட தற்போது கூடுதலாக பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளோம்.

133 திட்டங்கள்; 50 கோடி பேர் பயன்எங்களின் ஆட்சியில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்தோம். கடந்த 5 ஆண்டுகளில் 133 திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வீடு, சமையல் காஸ் என பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்களில் 50 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

மோடியின் ஆட்சியில் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவே உணர்கின்றனர். ஊழல், பணவீக்கம் விலைவாசி பா.ஜ., ஆட்சியில் கட்டுக்குள் உள்ளது. பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)