அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இல்லை : முதல்வர்

மதுரை : சென்னை அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு இருப்பதாக அதன் துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அது தவறான குற்றச்சாட்டு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கமல் விவகாரம் :மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' கமல் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகத்தினர் யாரும் கருத்து சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஐகோர்ட் கூறியுள்ளது எனவே, அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

வறட்சி :தேனி லோக்சபா அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயர் கல்வெட்டில் இடம்பெற்றது குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி, மாவட்ட கலெக்டர்களிடம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தவறான குற்றச்சாட்டு :அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா கூறியது தவறான குற்றச்சாட்டு,'' என்றார். மேலும், மதரீதியாக பேசி பதற்றத்தை ஏற்படுத்துவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பியபோது, ''தேர்தல் நேரத்தில் பரப்புரையில் விதிமீறினால், தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிகளை மீறாமல் பேசினால், நன்றாக இருக்கும்,'' என்றார்.


Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-மே-2019 05:02 Report Abuse
Mani . V "அப்படியெல்லாம், தலையீடு இல்லைங்க". (என்னய்யா சரியா சொல்லி திசை திருப்பி விட்டுட்டேனா? நான் யாரு? சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த ஆளு. என்கிட்டேவா?)
Raja - chennai,இந்தியா
17-மே-2019 17:23 Report Abuse
Raja அண்ணா யுனிவர்சிட்டியில் அனந்தகிருஷ்ணன் இருந்த வரை மட்டும் தான் சுதந்திரமாக இருந்தது, அதற்கு பின் மஞ்ச துண்டு அரசியல் புகுந்து நாசமாகிவிட்டது
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-மே-2019 16:31 Report Abuse
sankar அண்ணா பல்கலையின் தரம் போய் பல வருடங்கள் ஆகி விட்டது
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)