எம்.பி., என பெயர் பொறித்த அ.தி.மு.க., வேட்பாளர்; புதிய சர்ச்சையில் தேனி லோக்சபா தொகுதி

தேனி: தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஷ்வர பகவான் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூர்ணி ஆலயத்திற்கு நேற்று கும்பாபிஷேகப் பணிகள் நடந்தது. இந்த பணிகளுக்காக நன்கொடை அளித்த பெயர்கள், கல்வெட்டில் பொறிக்கப்பட்டு கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை:தேனி லோக்சபா தொகுதி பொதுத் தேர்தல், ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ல் நடந்தது. தேனி மவட்டத்தில் இரு ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு மே 19ல் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு இடம் மாற்றியது தொடர்பாக எதிர்கட்சியினர், காங்., அ.ம.மு.க.,வினர் பிரச்னை செய்தனர்.

இந்நிலையில் புதிய குழப்பமாக, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் சுரபி நதிக்கரையில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், தேனி லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பெயர், "தேனி பாராளுமன்ற உறுப்பினர்" என, விதிமுறை மீறி பொறிக்கப்பட்டு, கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. சிமென்ட் கலவை கொண்டு மறைக்கப்பட்டது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)