இவ்வளவு தான் ஹிமாச்சல்...

சர்ச்சை பேச்சாளர்கள்இங்கு தான் அடைக்கலம்!

காங்கிரசில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுபவர்களுக்கு, அடைக்கலமாகி வருகிறது, ஹிமாச்சல பிரதேசம்.சீக்கியர் படுகொலை விவகாரத்தைகிண்டலடித்த, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, சாம் பிட்ரோடாவை, 'பிரச்னை தீரும் வரை, கொஞ்ச காலத்திற்கு ஹிமாச்சலில் போய் இருங்கள்' என, அக்கட்சித் தலைவர், ராகுல் உத்தரவிட்டார்.அதுபோல, பிரதமர் குறித்து, அநாகரிகமாக கருத்து தெரிவித்த, மணிசங்கர் அய்யரையும், 'ஹிமாச்சலுக்கு போங்க...' என, ராகுல் கேட்டுக் கொண்டார். அவர்களும், தேர்தல் பணியாற்ற வந்தது போல, இங்குள்ள குளுமையான சீதோஷ்ணத்தை அனுபவிக்கின்றனர்.அந்த வகையில், மூன்றாவதாக வந்து சேர்ந்திருப்பவர், பஞ்சாப் முதல்வரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து.இதுகுறித்து, பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஷாநவாஸ் ஷுசேன் கூறும் போது, 'ராகுலுக்கு, இரண்டு மாமாக்கள். ஒருவர், சாம் பிட்ரோடா; மற்றொருவர், மணிசங்கர் அய்யர்; அவர்களை காக்க வேண்டியது, மருமகனின் கடமையல்லவா...' என்றார், கிண்டலாக!இந்த மாநிலத்தில் உள்ள, நான்கு தொகுதிகளுக்கு, நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.
சொந்த மாநிலத்திற்குபோக முடியலையே!

ஆண்டின், 10 மாதங்களிலும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவும் இந்த மாநிலத்தில், காங்., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலர், பிரியங்கா, சமீபத்தில் புறப்பட்டார்.அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாத அளவிற்கு, மோசமான சீதோஷ்ண நிலை நிலவியதால், வந்த வழியே திரும்பி விட்டார். உடனடியாக, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், 'வீடியோ'வை பதிவேற்றம் செய்தார்.அதில், 'என் சொந்த மாநிலமான, ஹிமாச்சலுக்கு வந்து பிரசாரம் செய்ய முடியவில்லையே என, வருந்துகிறேன். சீதோஷ்ணம் சரியானதும், அடுத்த முறை கட்டாயம் வருவேன். காங்கிரசுக்கு அனைவரும் ஓட்டளியுங்கள்' என, அதில் கூறினார்.'பிரியங்காவுக்கு சொந்த மாநிலம், டில்லியாச்சே...' என, யோசிக்காதீர்கள். அவரின் சொந்த பங்களா, இங்குள்ள சிம்லா புறநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில் தான் அங்கு, பிரியங்கா குடியேறினார்.

அனைவரையும்வியக்க வைக்கும் சுக்ராம்

மண்டி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், தன் பேரன் அஷ்ரே சர்மாவுக்காக, 92 வயது சுக்ராம் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரம், இளைஞர்களையே ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.கடல் மட்டத்திலிருந்து, 13 ஆயிரம்அடி உயரத்தில் உள்ள, 'ரோடங் பாஸ்' என்ற இடத்திற்கும் மேலே, பழங்குடியின பகுதி உள்ளது. மண்டி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அந்த இடத்தில், சில ஓட்டுகளும் உள்ளன.அங்குள்ள ஓட்டுகளை, தன் பேரனுக்கு கிடைக்கச் செய்ய, இந்த தள்ளாத வயதிலும், சுக்ராம், பனிமலைகளை கடந்து சென்று, ஓட்டு சேகரித்தார். பல ஆண்டுகளுக்கு முன், காங்., அமைச்சரவையில், தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம், சில ஆண்டுகளாக தான், பா.ஜ.,வில் தான் இருந்தார்.சில மாதங்களுக்கு முன் தான், காங்கிரசுக்கு தாவினார்; அதுவும், பேரப்பிள்ளைக்காகத் தான்!பா.ஜ., சார்பில் போட்டியிட, பேரனுக்கு,'சீட்' கிடைக்காது என தெரிந்ததும், பா.ஜ.,வுக்கு டாட்டா காண்பித்து, காங்கிரசுக்கு வந்து விட்டார்.இந்த வயதிலும், மலைகளையும், காட்டாறுகளையும், கணவாய்களையும் கடந்து, அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மாற்றுக் கட்சியினருக்கு புல்லரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தால் கிடைத்ததாதலைவர்களுக்கு பதவி?

ஹிமாச்சல் குளிர் பிரதேசமாக இருந்தாலும்,தேர்தல் பிரசாரத்தில் சூடு தான் பறக்கிறது. மாநில, பா.ஜ., முதல்வர், ஜெய்ராம் தாக்குரை, காங்கிரசைச் சேர்ந்த, எதிர்க்கட்சித் தலைவர், முகேஷ் அக்னிஹோத்ரி, 'விபத்தில் முதல்வரானவர்' என, மேடைகளில் கிண்டல் செய்கிறார்.இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளரான, பிரேம்குமார் துமால் தோல்வி அடைந்ததால், திடீர் முதல்வராக, தாக்குர் நியமிக்கப்பட்டார்.காங்கிரசின் கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'முகேஷ் அக்னி ஹோத்ரியும், விபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனவர் தான்' என்கிறார்.எப்படி என்கிறீர்களா...காங்கிரஸ் முன்னாள் முதல்வர், வீரபத்ர சிங், 84, அந்த பொறுப்புக்கு வர முடியாததால், வேறு வழியின்றி, அக்னிஹோத்ரி நியமிக்கப்பட்டார். அதை, தாக்குர் கிண்டலடிக்கிறார், இவ்வாறு!- அஸ்வனி சர்மா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)