பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு: அறிக்கை கேட்கிறது ஆணையம்

போபால் : 'நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்' என்று மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

தமிழக தேர்தல் பிரசாரத்தில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து' என்று கோட்சேவை குறிப்பிட்டு பிரசாரத்தில் பேசினார். அது நாடெங்கிலும் சர்ச்சையானது.

இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் போபால் பா.ஜ.,வேட்பாளர் பிரக்யாசிங் இன்று அளித்த பேட்டி ஒன்றில், ''நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார் ; இருக்கிறார் ; எப்போதும் இருப்பார்,'' என்று கூறினார். மேலும், கோட்சேவை தீவிரவாதி என்பவர்களை தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., சார்பில், பிரக்யாசிங்கை மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலதரப்பிலிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சு குறித்து, மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம், பிரக்யாசிங் பேச்சு குறித்து அறிக்கை அனுப்புமாறு தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)