ராகுல் மீண்டும் உளறல்: வைரலாகும் வீடியோ

புதுடில்லி : தங்கள் கட்சியை சேர்ந்த முதல்வர்களின் பெயர்களை காங்., தலைவர் தவறுதலாக கூறி உளறிய வீடியோ டுவிட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ம.பி.,யின் நீமச் பகுதியில் மே 14 ம் தேதி பிரசார கூட்டத்தில் பேச துவங்கிய ராகுல், மேடையில் இருந்த தலைவர்களை அறிமுகம் செய்கையில், ம.பி., முதல்வர் பூபேஷ் பகில், சத்தீஸ்கர் முதல்வர் ஹூகும் சிங் கரதா என குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று ம.பி., மற்றும் சத்தீஸ்கரில் காங்., ஆட்சி செய்கிறது. ம.பி.,க்கு கமல்நாத்தையும், சத்தீஸ்கருக்கு பூபேஷ் பகலையும் ராகுல் தான் முதல்வர்களாக நியமித்தார். தற்போது ராகுலே அவர்கள் கட்சியை சேர்ந்த முதல்வர்களின் பெயரை தவறாக கூறி இருப்பதை டுவிட்டரில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். பா.ஜ., ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும், ராகுலின் உளறல் பேச்சு வீடியோவை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் சிலர், மாநில முதல்வர்களின் பெயர்களை கூட நினைவில் வைத்துக் கொள்ளாத இவர் நாட்டின் பிரதமரானால், நாட்டின் நிலை என்ன ஆகும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.பொதுக்கூட்டங்கள் மற்றும் பேட்டியின் போது ராகுல் உளறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2018 ல் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, பலமுறை முயன்றும் விஸ்வேஸ்வரய்யாவின் பெயரை தவறாகவே ராகுல் உச்சரித்தார். அந்த சமயத்தில் ராகுலின் இந்த உளறல் பேச்சும் வைரலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)