மன்மோகனுக்கு 'சீட்' தருமா தி.மு.க.,?

சென்னை; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., சீட் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

6 எம்.பி.,சீட் :தமிழகத்தில், வரும் ஜூலையில் 6 ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் தி.மு.க.,விற்கு 3 எம்.பி.,சீட்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் ஜூன் மாதம் 14- ஆம் தேதியுடன் முடிகிறது. இவருக்கு இப்போது திமுக சார்பில் சீட் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த வாய்ப்பு 2020 :தற்போது அசாமில், பா.ஜ., ஆட்சி நடப்பதால், அம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யை தேர்வு செய்யும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை. தி.மு.க., மன்மோகனுக்கு எம்.பி. சீட் வழங்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும்.
ஏனெனில், வரும் 2020, ஏப்ரல் மாதத்தில் தான் 55 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிகிறது. எனவே, தி.மு.க., மூலம், மன்மோகனுக்காக சீட் பெற காங்கிரஸ் தலைமை முயற்சிக்கும் என்றே தெரிகிறது.

பேரத்திற்கு வாய்ப்பு ;ஒருவேளை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், மன்மோகன் எம்.பி., சீட்டையே, மத்திய அரசில் முக்கியமான இடத்தை பெறுவதற்கான பேரமாகவும் பயன்படுத்த தி.மு.க., முயற்சிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.ஏற்கனவே, தி.மு.க., சார்பில் ம.தி.மு.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி.,சீட் தருவதற்கும் லோக்சபா தேர்தல் உடன்பாட்டில் தி.மு.க., ஒத்துக்கொண்டுள்ளது. எனவே, வரும் மே-23 தேர்தல் முடிவுகளை பொறுத்தே இந்த விசயத்தில் தி.மு.க., தலைமை முடிவெடுக்கும் என்று தெரிகிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)