பா.ஜ., இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம்: காங்.,

புதுடில்லி: பா.ஜ., இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம், இதுவே எங்கள் நோக்கம் என ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழும்பியுள்ளது. இதற்கிடையில் நாங்களே ஆட்சி அமைப்போம் என பா.ஜ.,வும், காங்கிரசும் உறுதியாக கூறி வருகிறது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக குலாம் நபிஆசாத் கூறியதாவது; மோடி மீண்டும் பிரதமராக முடியாது. பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாத ஆட்சியை அமையும். எனது அனுபவத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் வைத்து கூறுகிறேன். பா.ஜ., 2வது முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. பா.ஜ., தே.ஜ., இல்லாத ஆட்சி அமையும். பா.ஜ., வரும் தேர்தலில் தங்களின் செல்வாக்கில் 125 தொகுதிகளுக்கு மேல் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
வேலையின்மை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி., உள்ளிட்ட பிரச்னைகளால் நாடு பாதிக்கப்பட்டு விட்டது. ஏழைகளுக்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.,வின் கொள்கை மற்றும் வெறுப்பு அரசியல் தோல்வியில் முடியும். இவ்வாறு ஆசாத் கூறினார்.


Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-2019 17:21 Report Abuse
Indian Dubai They don't have any plans or schemes for the country except removing BJP Govt. What a wonderful aim
sankar - ghala,ஓமன்
16-மே-2019 17:02 Report Abuse
sankar பலி கிடா ஆக இன்னொரு குமாரசாமி தேட ஆரம்பிச்சிருச்சு காங்கிரஸ் , ஆனா இந்த தடவை பப்பு வேகாது
Ambika. K - bangalore,இந்தியா
16-மே-2019 16:50 Report Abuse
Ambika. K குலாம் நபி பிராட் சொன்னால் சரியாக இருக்கும்
sripa - muscat,ஓமன்
16-மே-2019 16:20 Report Abuse
sripa இது எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்கள் தான். இவர்கள் ஒரு பொய்யான மாயையை உண்டாக்க பார்க்கிறார்கள். இவர்களின் கனவு ஒருகாலமும் பலிக்கப்போவதில்லை. மோடி தான் எங்களின் அடுத்த பிரதமர். ஜெய் மோடி சர்க்கார்.
Anand - chennai,இந்தியா
16-மே-2019 16:12 Report Abuse
Anand இனி பாஜக இல்லாத ஆட்சியை பாகிஸ்தானில் தான் உன்னால் கொண்டுவரமுடியும்.
a natanasabapathy - vadalur,இந்தியா
16-மே-2019 15:52 Report Abuse
a natanasabapathy Bjp illaatha aatchiyai kondu varuveer aanaal ozhal illaatha aatchiyai konduvara maatteer ozhal in marupeyar congress
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)