நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்

திருப்பரங்குன்றம்,:''ஹிந்து விரோதி என கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்.'', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசினார்.திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சக்தி வேலை ஆதரித்து கமல் தோப்பூர், மேல அனுப்பானடி, வில்லாபுரத்தில் பிரசாரம் செய்தார். பின் திருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தை பார்த்து பொய்யாக கட்சி வளர்ப்பவர்களுக்கு வயிறு எரியும். எங்கள் கூட்டத்திற்கு தாய்மார்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். கூட்டம் முடிந்த பின் தொண்டர்கள் குப்பைகளை அகற்றுகிறார்கள். இது போல அரசியலிலும் குப்பைகளை அகற்றுவோம்.ஹிந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும். காந்தியாக மாற நினைப்பவர்களில் நானும் ஒருவன். எனக்கு தேச பக்தி கற்றுத்தர உங்களுக்கு தகுதி இல்லை. 1967ல் காலத்தின் காட்டாயத்தால் இரு கட்சிகளை கொண்டு வந்தோம். தற்போது அதை அகற்றும் நிலையில் உள்ளோம். மக்களிடம் இருந்து என்னை பிரிக்க நினைத்தால் மரியாதை கெட்டு விடும். '' என்றார்.

கூட்டத்தில் செருப்பு வீச்சுதிருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் கமல் பேசுகையில் மேடை அருகே இருந்த தெருவுக்குள் இருந்து அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 11 பேர் 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிட்டபடி வந்தனர். அதில், ஒருவர் கமலை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் அது கூட்டத்திற்குள் விழுந்தது. போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.


krish - chennai,இந்தியா
16-மே-2019 17:50 Report Abuse
krish கமல் ஹாசரே, 1967 இல் தோன்றிய கட்சிகளை அகற்ற, உனக்கு அப்பாவி ஆன்மிக புனித இந்து மதம் தான் கைத்தடியா? தப்பி தவறி இந்துவாக பிறந்து, அர்த்தமுள்ள இந்துமதத்தின் குணாதிசயங்களையும், கோட்பாடுகளையும் நீ அறிந்துதான் இப்படி உளறி கொட்டுகிறாயா?.... தனி மனிதன் தவறான செயல்களுக்கு, அவன் பிறந்த மதத்தை அடையாளம் கட்டுவது அறிவீனம் என்று நீ அறியாயோ? நீ போற்றும் அல்லாவும், கர்த்தரும் உன்னை மன்னிப்பாராக... ஏனினில், அவர்கள் மனிதர்களை பிரிப்பதற்காக, உன்னை போல் அல்லாமல், தங்கள் சுய லாபங்களுக்காக மதங்களை தோற்றுவிக்கவில்லை என்பதே என் சிறு அறிவுக்கு எட்டிய விஷயம்.
16-மே-2019 16:15 Report Abuse
Iyappan Jayaram காங்கிரசின் கை கூலி கமல்ஹாசன் அவர்கள் சம்பாதித்த காசை எல்லாம் சினிமாவிலே விட்டு விட்டார் பிறகு எப்படி கட்சி கூட்டம்.,மாநாடு நடத்த பணம் ஒவ்வொரு சேனல்,மற்றும் அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் இதுக்கெல்லாம் மாநிலம் முழுவதும் செய்யும் செலவு என்றால் சாதாரண விஷயம் அல்ல பிரச்சாரம் செய்யும் இடங்களில்எல்லாம் 1980-ல் உருவான பேரியக்கத்தை அழிப்போம் என்றே கூறி வருகிறார் நம் தமிழ் நாட்டில் இந்து ஐதீகத்தை இந்து கடவுளை திட்டினால் இழிவாக பேசினால் நம் தமிழ்மக்களுக்கு பேசியவர் தியாகி ஆகி விடுகிறார் ஆனால் அவ்வாறு நினைத்த காலம் சென்றுவிட்டது அதுவும் பி ஜே பி வந்த பிறகு.ஆனால் அந்த விவரம் தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ஒழுக்கம் இல்லாத சினிமா பீல்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே உயர் மட்ட தலைவர்களாக பதவிகொடுத்து அழுகு பார்க்கும் கமல்கட்சியை ஆரம்பத்திலேயே ஒரம்கட்டுவோம் ஜெய்ஹிந்த் எனச்சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன் ஒவ்வொரு மதமும் அவ்வங்களுக்கு அம்மா அப்பா மாதிரி ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னோட அப்பா அம்மா உயர்வு ஒரு குழந்தையின் அம்மா அப்பாவை இன்னொரு குழந்தையின் அம்மா அப்பாவோடு ஒப்பிடக்கூடாது அதுபோல்தான் மதமும் ஆனால் இவர்கள் ஓட்டுக்காக தன் தாயை மோசம் என கூறி இருப்பதாவது படு கேவலமான விஷயம் ஒவ்வொரு மதத்திலும் ஒரு கொலைகாரன் இருப்பான்
16-மே-2019 15:25 Report Abuse
Ganesan Madurai குடும்பமே இல்லாத சேர்ந்து வாழும் வாழ்க்கையை கொண்ட உனக்கு எங்களுக்கு காந்தி பற்றி இந்துமதத்தை பற்றி சொல்லத்தரும் தகுதி இல்லை. வாக்காளர்களை ரவுடித்தனம் காட்டி மிரட்டி ஓட்டுவாங்க நினைத்து நீ மண்ணைக்கவ்வும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
karthick TD - Madurai, Tamilnadu,இந்தியா
16-மே-2019 14:37 Report Abuse
karthick TD கமல், ஒரு சின்ன அறிவுரை, மதம் என்பது ஒரு மனிதனின் தனி பட்ட அடையாளமே தவிர சமூக வாழ்வியலுற்க்கானது அல்ல. ஒரு மனிதன் அவனது நம்பிக்கையை(ஆன்மிகம் அல்லது நாத்திகம்) அவனுள் கொண்டிருக்கலாம் மேலும் அதிகபட்சம் அவனை சார்ந்தவர்களை நல்வழி படுத்த உபதேசம் செய்யலாம். மேலும் இந்த நம்பிக்கை உலகில் வாழும் எந்த ஜீவராசியும் துன்புறுத்தவோ, தரம் தாழ்த்தவோ, வருத்தமுறவோ செய்வது தரம் தாழ்த்த செயல் ஆகும். இதற்க்கு மேல் மதத்திற்கு விளக்கம் இருந்தால் கூறலாம். கார்த்திக் தி தா
rishi - varanasi,இந்தியா
16-மே-2019 14:33 Report Abuse
rishi இதுபோன்ற சம்பவம் கண்டிப்பாக இந்து இளிச்சவாயர்களுக்கு தேவைதான் அப்போதான் பொது எதிரி யாரென்று தெரியும் , ஆம் இந்துக்களின் பொது எதிரி , திமுக , மதிமுக , விசிக , திருமுருகன் காந்தி , கமலஹாசன் , கமினிஸ்ட, வேல்முருகன், சீமான் காங்கிரஸ் .
Manivannan.J - Chennai,இந்தியா
16-மே-2019 13:41 Report Abuse
Manivannan.J மதத்தின் பெயரால் ஆட்சி, வருங்காலத்தில் நம் அழிவுக்கு துணைவகுக்கும், இந்தியா என்ற ஒரு குடும்பதை நேசிக்கும் ஒருவர் வேண்டும்.
Ravi - Chennai,இந்தியா
16-மே-2019 13:31 Report Abuse
Ravi எங்களுக்கு உன்னை தெரியும் , ஊரை விட்டு ஓடுவேன் என்று கூறிய தைரியசாலி , சரி கோட்ஸே தீவரவாதி என்றால் வாஞ்சிநாதன் யார் கோழையே , பகத் சிங்க் யார் , வீரபாண்டிய கட்டபொம்மன் யார் முட்டாளே ?. ஆனால் நீ ஒரு மாபெரும் உதவி செய்து இருக்கிறாய் , முன்பு காந்திகு எதிராக எழுதினால், எங்களையே வெறுப்பார்கள் மக்கள் , இன்று உனக்கு எதிராக காந்தி பற்றிய உண்மைகளை வெளியே சொல்வதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறாய் நன்றி .
Raja - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-மே-2019 15:45Report Abuse
Raja. காந்தியின் மிதவாத முயற்சி இல்லாமல் உனக்கு இந்த எழுத்து சுதந்திரம் உண்டா...
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
16-மே-2019 13:28 Report Abuse
திண்டுக்கல் சரவணன் படம் ரிலீஸ் ஆகலேன்னா இந்தியாவை விட்டு வேறு நாடு போய்டுவேன்னு சொன்னப்பவே உன்னோட தேச பக்தி மக்களுக்கு தெரிந்து விட்டது. காலம் போன கடைசில யாராவது கிடக்குறாங்களான்னு பாரு.
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
16-மே-2019 13:25 Report Abuse
Nallavan Nallavan ஹிந்து விரோதி -யாக இருக்கவும் மண்டைல கொஞ்சம் மசாலா வேணும் .......
சுந்தரம் - Kuwait,குவைத்
16-மே-2019 15:28Report Abuse
சுந்தரம் இவர் விரும்புவது மண்டை மசாலாவை அல்ல....
Azhagan Azhagan - Chennai,இந்தியா
16-மே-2019 13:24 Report Abuse
Azhagan Azhagan இவன் யாரென்று புரிகிறதா? இந்துக்களின் எதிரி என்று தெரிகிறதா?
மேலும் 109 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)