பா.ஜ., கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன்: மம்தா குற்றச்சாட்டு

கோல்கட்டா: பா.ஜ.,வின் கீழ் தேர்தல் கமிஷன் செயல்படுவதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

கோல்கட்டாவில் அமித் ஷா பேரணியின் போது நடந்த வன்முறையை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாக, மேற்குவங்கத்தில் நாளையுடன்(மே 16) பிரசாரம் ஓயும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திரிணமுல் கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பா.ஜ., கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் இயங்குவதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கோல்கட்டாவில் நடந்த அமித் ஷா பேரணியின் போது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில், வித்யாசாகர் கல்லூரியில் இருந்த வங்க புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நடந்த வன்முறை சம்பவம் போன்ற ஒன்றை பா.ஜ., ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்காக பிரதமர் மோடி இதுவரை மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை. மேற்குவங்க மக்களுக்கு இது பெரும் வருத்தத்தை உண்டாக்கி உள்ளது.

அமித் ஷா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், தேர்தல் கமிஷனை மிரட்டும் வகையில் பேட்டி அளித்து உள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக நான் தொடர்ந்து பேசி வருவதால், மேற்குவங்கத்தை பா.ஜ., குறி வைத்துள்ளது. இதற்கு மேற்கு வங்கமும், நானும் பயப்படமாட்டோம்.

பா.ஜ., கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் கமிஷன் இயங்குகிறது. இதனால் தான் இதற்கு முன் எப்போதும் இல்லாத முடிவை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. வன்முறைக்கு காரணமாக அமித் ஷா மீது தேர்தல் கமிஷன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பிரதமர் மோடியால் அவரது மனைவியையே சரிவர பார்த்துக் கொள்ள முடியவில்லை. அவர் எப்படி நாட்டை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.

தேர்தல் கமிஷன் முடிவு நியாயமற்றது; அரசியல் நெருக்கடியால் முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, நாளை(மே 16) இங்கு இரு பேரணிகளை முடிக்க நேரம் ஒதுக்கி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Sitaraman Munisamy - SALEM,இந்தியா
16-மே-2019 15:16 Report Abuse
Sitaraman Munisamy தமிழகத்தில் தேர்தல் பணியாற்றிய பணியாளர்களுக்கு தபால் ஒட்டு வழங்காமல் ஆணையம் ஏமாற்றி உள்ளது. இதற்காக ஆசிரியர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதிலிருந்தே ஆணையம் ஆளும் கட்சிக்கு 100 % சாதகமாக நடப்பது தெரிகிறது. ஒருலட்சம் வாக்குகள் வேண்டுமென்றே தவிர்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜாக்டோ அமைப்பு ADMK வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தெரிவித்து விட்டனர்.
Narayanan Muthu - chennai,இந்தியா
16-மே-2019 07:16 Report Abuse
Narayanan Muthu தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும். அது ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் எதிர் கட்சியின் கட்டுப்பாட்டிலா இருக்கும் என ஒரு அதிபுத்திசாலி கேள்வி எழுப்புவது முட்டாள்தனம். ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் ஆணையம் இருந்தால் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் எப்படி நடக்கும் . தேர்தல் ஆணையம் பாஜகாவுக்கு வால் பிடிக்கும் அமைப்பாக மாறி விட்டது இந்தியாவின் துரதிருஷ்டம். இந்த தேர்தல் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்பது சந்தேகம்தான்.
blocked user - blocked,மயோட்
16-மே-2019 04:08 Report Abuse
blocked user அதற்காக தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு ஆள்பவர்களிடம் இல்லாமல் எதிரிக்கட்சிகளிடமா இருக்கும்?
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
16-மே-2019 03:15 Report Abuse
Ramasami Venkatesan மம்தா பனர்ஜீ மோடி மீது அவரின் சொந்த வாழ்க்கை, மனைவி பற்றி கூறியுள்ளார் - சொந்த மனைவியை காப்பாற்ற முடியாதவர் நாட்டை எப்படி காப்பாற்றுவார் என்று கேட்கிறார். குடும்பம் என்று ஒன்று இல்லாததால் தான் நாட்டை நன்றாக காப்பாற்ற முடியும். இல்லையென்றால்,நாம் கண் கூடாக பார்க்கும் தனது குடும்பத்துக்காக சொத்து சேர்த்துக்கொண்டிருப்பார்கள், மக்கள் நலன் அம்போ. யாராவது இவரது பர்சனல் லைஃப் பற்றி பேச ஆரம்பித்தால் இவரால் பொறுத்துக் கொள்ளமுடியுமா.
sahayadhas - chennai,இந்தியா
16-மே-2019 00:08 Report Abuse
sahayadhas அவிங்க செய்யாத குற்றம் ஏது.?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)