மம்தாவிடம் ‛பம்முகிறாரா' ராஜ்நாத்?

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்., கட்சிக்கு போட்டியாக பா.ஜ., வளர்ந்து வருகிறது என அக்கட்சி தலைவர் மம்தா நினைப்பதால், அவருக்கும் பிரதமர் மோடிக்கும் வார்த்தை போர் பெரிதாகி வருகிறது.
மே 19ம் தேதி இறுதிக் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதற்குள் மோடிக்கும் மம்தாவுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் கோல்கட்டாவில் பா.ஜ., தலைவர் அமித்ஷா நடத்திய பேரணி, வன்முறையில் முடிந்தது. ஆனால் மோடி, அமித்ஷா போல மற்ற பா.ஜ., தலைவர்கள் மம்தா பற்றி கடுமையாக பேசுவதில்லை என்று அக்கட்சி தலைவர்கள் சிலரே சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மம்தாவிடம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராம், ஸ்மிருதி ஆகியோர் மம்தாவை காய்ச்சி எடுக்கின்றனர்.
கோல்கட்டா வன்முறை பற்றி டில்லியில் ராஜ்நாத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்த ராஜ்நாத், மம்தாவின் பெயரைக் கூறாமல், மேற்கு வங்க அரசு, அம்மாநில முதல்வர் போன்ற வார்த்தைகளையே பயன்படுத்தி உள்ளார்.மோடியைப் போல தான் பேச முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரிடமும் நல்ல உறவு இருக்க வேண்டும் என்று ராஜ்நாத் நினைப்பது தெரிகிறது. தான் போட்டியிடும் லக்னோ தொகுதியில் பிரசாரத்தின் போது கூட எதிர்க்கட்சி தலைவர்களின் பெயரைச் சொல்லி ராஜ்நாத் விமர்சிப்பது இல்லை.
ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு, தொங்கு பார்லிமென்ட் உருவானால் மம்தாவின் தயவு தேவைப்படலாம் என்று ராஜ்நாத் கருதுவது தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஆனால் பா.ஜ., 300 சீட்களுக்கு மேல் பெறும் என்று அமித்ஷா அடித்துக் கூறுகிறார்.
பா.ஜ.,வின் உணர்வுகளை சரியாக ராஜ்நாத் வெளிக்காட்டவில்லை என்று கருதித் தான், டில்லியில் அவரச அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் அமித்ஷா.

ராஜ்நாத் - மம்தா கோபம்:
கடந்த ஜனவரியிலும் அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி விசாரிக்க மம்தாவுக்கு ராஜ்நாத் போன் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் சூடு பிடித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அப்போது மம்தாவிடம் ராஜ்நாத் கேட்டுள்ளார். அதற்கு மம்தா, ‛‛உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்தி வையுங்கள்'' என்று பதிலுக்கு எச்சரித்தாராம்.
அதன் பிறகு மம்தா பற்றி ராஜ்நாத் அதிகம் பேசுவதில்லை. இருவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேல் நல்ல நட்பு இருக்கிறது.


Ram Sekar - mumbai ,இந்தியா
15-மே-2019 21:13 Report Abuse
Ram Sekar ராஜ்நாத் சிங்கை மம்தா தனிப்பட்ட முறையில் திட்டி கேவலப்படுத்தியது இல்லை. அதனால் அவர் மரியாதை கொடுப்பதில் தவறு இல்லை. மோடியை பத்தி என்ன என்னென்னம்மோ சொல்லி திட்டி பேசினால் பதிலடி அப்படிதான்யா வரும். எங்கே ராஜ்நாத் சிங்கை கேவலமா திட்டி பாருங்கள் அப்போது தெரியும்,
அன்பு - தஞ்சை,இந்தியா
15-மே-2019 20:09 Report Abuse
அன்பு அட பாவிகளா மோடிக்கு சொம்பு அடித்து அடித்து, கடைசியில் ராஜ்நாத் சிங் மேலே சந்தேகம் வந்துட்டதா? வாஜிபாய், அத்வானி போன்று நாகரீக அரசியல் செய்பவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் சுவ்ராஜ் சுஷமா போன்றோர். இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்லவர்களையும் பிஜேபியில் இருந்து வெளியேற்றிவிட துடிக்கிறது மோடி குரூப்.
Chelladurai - சென்னை,இந்தியா
15-மே-2019 19:32 Report Abuse
Chelladurai ராஜ்நாத் சிங் அரசியல் நாகரீகம் தெரிந்தவர்... எதிர் கட்சி தலைவர்களையும் மதிக்கும் நற்பண்பு கொண்டவர்... அரசியல் அரங்கில் காட்சிகள் மாறும் போது அனைவரும் விரும்பப்படும் தலைவராக அவர் தெரிவார்... பாஜாகவில் உள்ள மற்ற கழிசடைகள் மாதிரி தான் அவரும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல...
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
15-மே-2019 19:11 Report Abuse
Vaideeswaran Subbarathinam Rajnath has never antagonist anybody by his words,deeds,and actions.
15-மே-2019 17:15 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மம்தா என்ன பெரிய அப்படக்கரா ? அவரிடம் பம்முவதற்கு.
puratchiyalan - Nagercoil,இந்தியா
15-மே-2019 18:15Report Abuse
puratchiyalan...
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
15-மே-2019 17:09 Report Abuse
Ab Cd மோடிக்கு எதிராக பிரதமர் தேர்வில் போட்டி போடும் யோசனையில் இருப்பார்
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-மே-2019 16:55 Report Abuse
இந்தியன் kumar ஒரு சிலர் எல்லோரிடமும் மேம்போக்காக நடந்து கொள்வார்கள் எதிர்ப்பை சம்பாதித்து கொள்ள மாட்டார்கள் .
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-மே-2019 16:53 Report Abuse
இந்தியன் kumar பெண் தாதாவின் எதிர்கால அரசியல் 23 ஆம் தேதி தெரிந்து விடும் , ஒரு காலத்தில் தேர்தல் என்றால் பிஹாரில் வன்முறை நடக்கும் ஆனால் இப்போது மேட்கு வங்காளம் பக்கம் திரும்பி விட்டது.
Chowkidar N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
15-மே-2019 16:45 Report Abuse
Chowkidar N.Purushothaman மம்தா பிரிவினையை ஏற்படுத்தி கலவர சூழ்நிலையை கொண்டு வர முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் ..மேற்கு வங்கத்தில் வன்முறை தலைவிரித்தாடுகிறது ..அதன் உச்சகட்டமாக இன்று பகல்காளி, விஷ்ணுபூர்,டிஷமோன் துறைமுகம் போன்ற பகுதிகளில் உள்ள தர்க்காக்களில் அந்த கிராமங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளதால் அங்குள்ள இந்துக்கள் தங்கள் வீடுகள் உடமைகளை விட்டுவிட்டு சாரை சாரையாக வெளியேறுகின்றனர் ...மேற்கு வங்கம் நரகமாகி கொண்டு இருக்கிறது ...மம்தா உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பேராபத்தில் முடியும் ...தன் மமதை தலைக்கேறி ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறார் ...
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-மே-2019 16:29 Report Abuse
A.George Alphonse Normally the Home minister will always maintain cordial relationship with CMs of all the states of our country in order to maintain law and order peacefully through out the country.So Mr Rajnath Singh maintaining that with CM of WB.It shows his maturity of mind and vast experience in Politics.He will continue it now also.
மேலும் 2 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)