மேற்குவங்கத்தில் கருத்து சுதந்திரம் இல்லை

புதுடில்லி : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் மீம்ஸ் வெளியிட்ட பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பிரியங்கா சர்மாவை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதன்படி விடுதலை செய்யப்பட்ட பிரியங்கா, செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது அவர், என்னை விடுவிக்க முயற்சித்த பா.ஜ.,விற்கு நன்றி. மேற்கு வங்கத்தில் கருத்து சுதந்திரம் கிடையாது. எனது மீம்ஸ் பதிவிற்காக மன்னிப்பு கடிதத்தில் கையெழுத்திடக் கோரி போலீசார் என்னை வற்புறுத்தினர். இருப்பினும் நான் மறுத்து விட்டேன். நான் சிறையில் இருந்த 5 நாட்களும் போலீசார் என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லி மிகவும் துன்புறுத்தினர் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)