கலவரத்திற்கு மம்தா கட்சி காரணம்: அமித்ஷா

புதுடில்லி : கோல்கட்டாவில் நடந்த கலவரத்திற்கு மம்தாவின் திரிணாமுல் காங்., கட்சியினரே காரணம் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கோல்கட்டா கலவரம் தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, 6 ம் கட்ட தேர்தலின் போது மேற்கு வங்கத்தை தவிர நாட்டில் வேறு எங்கும் வன்முறை நடக்கவில்லை.
அங்கு வன்முறையில் ஈடுபட்டது திரிணாமுல் காங்., தான் என்பதற்கு ஆதாரம் உள்ளது. பா.ஜ.,வினர் அல்ல. வன்முறையில் ஈடுபட்ட பா.ஜ., தான் என மம்தா கூறி வருகிறார். மம்தா 40 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறார். ஆனால் பா.ஜ., அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. அங்கெல்லாம் எந்த வன்முறையும் நடக்கவில்லை என்பதை மம்தா புரிந்து கொள்ள வேண்டும்.ஆரம்பம் முதலே பா.ஜ., தொண்டர்கள் வைத்த பிரதமரின் பேனர்கள், போஸ்டர்களை அப்புறப்படுத்த தனது கட்சியினரை தூண்டிவிட்டு வருகிறார். வன்முறை நடப்பதற்கு முன்பே கல்லூரியின் கதவு மூடப்பட்டுள்ளது. அதன் பிறகே திரிணாமுல் காங்., கட்சியினர் கற்களை வீசி உள்ளனர். சிலையை தாக்கியதும் மம்தா கட்சியை சேர்ந்த குண்டர்கள் தான்.இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி வேலை. ஆனால் அதை பா.ஜ., செய்ததாக தவறாக கூறுகிறார்கள். போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார்கள். சிஆர்பிஎப் வீரர்கள் மட்டும் இல்லை என்றால் நான் தப்பி வருவது பெரும் சிக்கலாகி இருக்கும். திரிணாமுல் கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்து விட்டார்கள்.தேர்தலில் தோற்று விடுவோம் என மம்தாவுக்கு தெளிவாக தெரிந்து விட்டது. அதனால் தான் வன்முறையின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிட்டு மேற்குவங்க அரசு மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 2 நாட்களுக்கு முன்பே மம்தா மிரட்டி பார்த்தார். அதற்கு பழி தீர்க்கவே இந்த தாக்குதல். கோல்கட்டாவில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் திரிணாமுல் கட்சியினர் யார் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை. 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மம்தா இன்னும் தனது கட்சியை கட்டுப்படுத்தவில்லை. மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தில் குரல்வளை நெறிக்கப்படுகிறது.நடந்து முடிந்துள்ள 6 கட்ட தேர்தல்களில் பா.ஜ., ஏற்கனவே முழு பெரும்பான்மையை பெற்று விட்டது. 7 ம் கட்ட தேர்தலுக்கு பிறகு 300 இடங்களை பா.ஜ., கடந்து, மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைக்கும். ஒருவேளை 3வது அணி தங்களின் தலைவரை தேர்வு செய்தால், அதை வரவேற்கிறோம். மம்தா உண்மையாகவே நேர்மையானவராக இருந்தால், இந்த கலவரம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேற்குவங்க அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காது. அதனால் தேர்தல் கமிஷன் தலையிட்டு, நடவடிக்கை எடுக்கும் என நம்புறேன் என்றார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)