எம்.பி., சீட் மறுப்பு: பஞ்சாப் முதல்வர் மீது சித்து மனைவி புகார்

சண்டிகர்: அமிர்தசரஸ் லோக்சபா தொகுதியில் தான் போட்டியிடுவதை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மேலிட பொறுப்பாளர் ஆஷா குமாரி ஆகியோர் தடுத்து விட்டதாக பஞ்சாப் அமைச்சர் சித்து மனைவி நவ்ஜோத் கவுர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சித்து மனைவிக்கு எம்.பி., சீட் கிடைப்பது சரியாக இருக்காது என கேப்டனும், ஆஷா குமாரியும் நினைக்கின்றனர். கடந்த ஆண்டு, துஷேரா ரயில் விபத்து சம்பவத்திற்குபின் தேர்தலில் என்னால் வெற்றி பெற முடியாது எனக்கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டது. பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் கட்சியை தன்னால் மட்டுமே வெற்றி பெற வைக்க முடியும் என முதல்வர் நினைக்கிறார். அமரீந்தர் சிங் இளைய கேப்டன். ராகுல் தான் சீனியர் கேப்டன். 13 தொகுதிகளிலும் தன்னால் மட்டுமே காங்கிரசை வெற்றி பெற வைக்க முடியும் என இளைய கேப்டன் கூறி வருகிறார். முதல்வர் பிரசாரம் செய்யட்டும். ஆஷா குமாரி, நட்சத்திர பேச்சாளர். ராகுல், பிரசாரம் செல்லும் இடங்களுக்கு சித்து செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.


சண்டிகர் தொகுதியில் போட்டியிட நவ்ஜோத் கவுர் விரும்பினார். ஆனால், மேலிடம் மறுத்துவிட்டது. அமிர்தசரஸ் தொகுதியில் சிட்டிங் எம்.பி., குர்ஜித் சிங்கை நிறுத்தியுள்ளது. அமிர்தசரஸ் தொகுதியில், பா.ஜ., சார்பில் சித்து மூன்று முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு, சித்துவும் தனது கேப்டன் ராகுல் எனக்கூறியிருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் மே 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)