7ம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில் வன்முறை நடக்குமா?

அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களுக்கும், ஆக்ரோஷ கொள்கை பிடிப்புக்கும் பெயர் பெற்ற மேற்கு வங்கத்தில், வரும் ஞாயிறு அன்று நடக்க உள்ள, ஏழாவது கட்ட தேர்தலில், கடும் வன்முறை நடக்கும் என, உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் முன்னோட்டம் தான், நடந்து முடிந்த, ஆறாவது கட்ட தேர்தலில் நடந்த வன்முறை வெறியாட்டங்கள். இதில், பா.ஜ., தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்; பலர் படுகாயம் அடைந்தனர். பா.ஜ., வேட்பாளர், பாரதி கோஷ் என்பவரை, போலீஸ் நிலையத்திற்குள்ளேயே தாக்கும் நிலையும் ஏற்பட்டது.

மேலும், பரூய்பாரா என்ற இடத்தில் நடக்கவிருந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சியின் தலைவர், அமித் ஷா வந்த ஹெலிகாப்டருக்கு, தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை; இதனால், அந்த கூட்டமே ரத்து செய்யப்பட்டது.இதனால், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

பிற பிரசார கூட்டங்களில், மம்தாவுக்கு சவால் விடும் வகையில், அமித் ஷா பேசியது, திரிணமுல் காங்கிரஸ்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. மம்தாவுக்கும், சவால் ரொம்ப பிடிக்கும் என்பதால், ஏழாவது கட்டத்தில், கடும் வன்முறை நடக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, தேர்தல் நடக்கும் தொகுதிகள், தலைநகர் கோல்கட்டா மற்றும் அதை சுற்றியுள்ள, ஒன்பது தொகுதிகள்; இங்கு, பா.ஜ.,வும் பலமாக உள்ளது.

ஆறாவது கட்ட தேர்தலுக்கு பின், பா.ஜ., கூட்டங்களில் கல் வீச்சு, ரகளைகள் நடத்தப்படுவது, அக்கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இரு கட்சியினரின் மோதலை, மகிழ்ச்சியாக ரசிக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள், 'இந்த இரு கட்சிகளும் எப்படியாவது அழியட்டும்; அதன் பிறகாவது மாநிலம் மேன்மையாகட்டும்' என்கின்றனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)