கோட்சே தீவிரவாதி தான்: ஓவைசி

ஐ தராபாத்: கோட்சே ஒரு தீவிரவாதிதான் என ஆந்திராவை சேர்ந்த அனைத்து இந்திய முஸ்லிம் கட்சியின் (ஏ.ஐ.எம்.ஐ.எம். ) எம்.பி., ஓவைசி கூறியுள்ளார். கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு அடங்கும் முன்னர் தற்போது ஓவைசியும் கோட்சேவை தீவிரவாதி என கூறியிருப்பதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மக்கள் நீதி மைய தலைவர் கமல் அரவக்குறிச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, " சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில் ஓவைசி கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆம் கோட்சே ஒரு தீவிரவாதி தான். இவர் தேச தலைவர் மகாத்மாவை கொன்றவர், இந்த கொலைகாரனை சிறந்த மனிதர் என்றா அழைக்க முடியும் ? வேறு என்ன மாதிரி அழைக்க முடியும் ? தீவிரவாதி என்று தான் அழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)