எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் சவால்

புதுடில்லி: எனக்கு பினாமி சொத்து, பண்ணை வீடு, வணிக வளாகம், வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் உள்ளது எனக்காட்ட முடியுமா என பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.


உ.பி., மாநிலம் பாலியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகள் எனது ஜாதி என்ன என கேட்டு வருகின்றனர். எனக்கு ஒரே ஜாதி வறுமை தான். இதனால், தான் வறுமைக்கு எதிராக போராடி வருகிறேன். மாயாவதி, அகிலேசை விட நீண்ட காலம் குஜராத்தில் முதல்வராக இருந்துள்ளேன். நான் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். பலர் போட்டியிட உதவி செய்துள்ளேன். ஆனால், ஆதரவுக்காக ஜாதியை பயன்படுத்தியது இல்லை. என்னை மோசமாக விமர்சிக்கும் கட்சிகளுக்கு ஓட்டு மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.


மாயாவதி, அகிலேஷ் கூட்டணி ஜாதி அரசியலில் ஈடுபடுகிறது. தங்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் பங்களா, வீடுகள் கட்டி கொண்டனர். எனக்கு பினாமி சொத்து, பண்ணை வீடு, வணிக வளாகம், வெளிநாட்டு வங்கிக்கணக்கில் பணம் உள்ளது எனக்காட்ட முடியுமா எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுகிறேன். விமர்சனத்தில் ஈடுபடும் கட்சிகள், மீண்டும் தேர்தலுக்கு பின்னர் மோதிக்கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)