சவுபே - சிங் பக்சாரில் போட்டி

ராமாயணத்தில், விஸ்வாமித்திரரின் யாகத்தை கெடுத்த, சுபாஹு அரக்கர்களை, ராமபிரான் மற்றும் லட்சுமணர் அழித்த இடமாக, பீஹாரில் உள்ள, பக்சார் கருதப்படுகிறது.இம்மாதம், 19ல், தேர்தலை சந்திக்கும்இந்த தொகுதியில், பா.ஜ.,வின் தற்போதைய, எம்.பி., அஸ்வனி சவுபேவுக்கும், ஆர்.ஜே.டி.,யின், ஜெகதானந்த் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.மத்திய இணையமைச்சராக இருக்கும் அஸ்வனி சவுபே, கடந்த முறை, ஜெகதானந்தை வீழ்த்தி, வெற்றிக்கொடி நாட்டினார். இந்த முறையும், இருவரும் எதிர்கொள்வதால், போட்டி பலமாக உள்ளது.பீஹாரில், லாலு மற்றும் ரப்ரி, முதல்வராக இருந்த போது, ஜெகதானந்த், நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர்; 2009ல் பக்சார் லோக்சபா தொகுதியின், ஆர்.ஜே.டி., - எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இந்த தொகுதியில் உள்ள, 18 லட்சம் வாக்காளர்களில், மூன்று லட்சம் யாதவர்; 1.5 லட்சம் முஸ்லிம்கள்; 2.5 லட்சம் ராஜபுத்ரர்கள் உள்ளனர். இவர்களில், முஸ்லிம்கள் மற்றும் யாதவர்கள் ஓட்டு, சிங்கிற்கு தான் கிடைக்கும். சவுபேவுக்கு, முன்னேறிய சமுதாயத்தினர், பூமிஹார் மற்றும் ராஜபுத்ரர்களில் பெரும்பான்மையினர் ஓட்டு கிடைக்கும் நிலை உள்ளது.எனினும், அவர் சரியாக செயல்படவில்லை என்ற அதிருப்தி, தொகுதியில் நிலவுவதால், அவரின் வெற்றி எளிதாக இருக்காது எனவும் கூறப்படுகிறது.அதுபோல, ஜெகதானந்த் சிங், லாலுவின் அனுமன் என, போற்றப்படுபவர். மாநில அமைச்சராக இருந்த போது, 24 மணி நேர மின்சாரம், விவசாயிகளுக்கு கிடைத்ததால், நீர் பாசனத்தில் இந்த பகுதி சிறந்து விளங்கியது. அதனால், விவசாயிகள் இப்போதும், சிங் மீது பாசம் கொண்டுள்ளனர்.எனவே, பக்சார் தொகுதியின் முடிவு, எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)