என்னை திட்ட வார்த்தை தேடுகிறார்கள்: மோடி

சோலன் : என்னை திட்டுவதற்காக எதிர்க்கட்சியினர் தினமும் அகராதியில் வார்த்தை தேடுகிறார்கள் என பிரதமர் மோடி பேசி உள்ளார். இமாச்சல பிரதேசம் சோலன் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்.,கும் அவரது மெகா கூட்டணி நண்பர்களும் தங்களின் முக்கிய ஆலோசனைகளை ஒத்திவைத்துள்ளனர். நாட்டு மக்கள் தோல்வியை தந்து விட்டால் எடுத்த முடிவின்படி நடக்க முடியாது என்பதால் அவர்கள் அதனை ஒத்திவைத்துள்ளனர். ஜாமின் பெற்று வெளியில் இருக்கும் சிலர் உங்களின் காவலனை (மோடி) எப்படி எல்லாம் அவதூறாக பேசலாம் என தினமும் அகராதியில் புதிய வார்த்தைகளை தேடி வருகின்றனர்.ஆனால் உங்களின் காவலன் இதற்கெல்லாம் அசந்து விடமாட்டேன். அவர்களின் அவதூறுகள் எல்லாம் காளான்களை போன்று நினைத்து விழுங்கி விடுகிறோம். தங்களின் முன்னோர்களின் பெயர்களை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் அந்த முன்னோர் செய்த தவறுகளை பற்றி கேள்வி கேட்டால், நடந்தது நடந்து விட்டது என்கிறார்கள். இவ்வாறு மோடி பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)