மத்திய அமைச்சர் ஆவாரா அமித்ஷா

புதுடில்லி: வரும் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால் புதிய அரசில் அக்கட்சி தலைவர் அமித்ஷா அமைச்சராக பதவி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜ., உள் வட்டாரத்துக்கு உள்ளேயே இக்கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரசார கூட்டங்களில் பேசிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ‛‛பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகி விடுவார்'' என்று கூறி வருகிறார். பா.ஜ.,வுக்கு எதிரானவர்களை மிரட்டுவதற்காகவே கெஜ்ரிவால் இப்படி பேசினாலும், உண்மையில் அமித்ஷாவிற்கு மத்தியில் முக்கியமான துறை ஒதுக்கப்படும் என்கின்றனர்.அமைச்சரவையில் 2வது இடமான உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷாவிற்கு மோடி கொடுத்தால், இப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் நிலைமை என்ன என்ற அடுத்த கேள்வி எழுகிறது.

நம்பிக்கைக்குரியவர்:மோடியின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார் அமித்ஷா. தேர்தல் கூட்டணிகளை அமைத்து தேர்தல் பணிகளை அமித்ஷா கையாண்ட விதம், மோடியை கவர்ந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தால் அமித்ஷாவிற்கு பரிசளிக்கும் விதமாக உள்துறை, ராணுவம், வெளியுறவு மற்றும் நிதி, இதில் ஏதாவது ஒன்று அமித்ஷாவுக்கு தரப்படலாம்.உள்துறை கிடைத்துவிட்டால், மத்திய அமைச்சரவையில் அமித்ஷா 2வது இடத்தில் இருப்பார்.அடுத்த அரசு, முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தர உள்ளது. எனவே, இப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு வேளாண்மை துறை ஒதுக்கப்படலாம்.ஆனால் நிதி அமைச்சராக இருக்கும் அருண் ஜெட்லீ தொந்தரவு செய்யப்பட மாட்டார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அப்படியே. தங்கள் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் இவர்கள் என்று மோடி நினைக்கிறார்.
வெளியுறவு அமைச்சராக சுஷ்மாவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். இப்போதைய தேர்தலில் சுஷ்மா போட்டியிடாததால் ராஜ்யசபா சீட் அவருக்கு தரப்படலாம்.
சிறப்பாக பணிபுரிந்த இன்னொரு அமைச்சர் பியூஸ் கோயல். இவருக்கு நிதி அமைச்சகத்தை தரலாம் என்று அமித்ஷா நினைப்பதாக கூறப்படுகிறது. அருண் ஜெட்லி விடுமுறையில் சென்றிருந்தபோது பியூஸ் கோயல் தான் அந்த துறையை கவனித்தார்.ஏற்கனவே கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக தன்னை நிலை நிறுத்திவிட்டார் அமித்ஷா. அவர் நினைத்தால், எந்த அமைச்சரையும் அழைத்து அவரது துறையின் பணிகள் பற்றி கேட்கலாம்.
எனவே, கட்சியின் வளர்ச்சி, நலன் கருதி அவரே கட்சி தலைவராக நீட்டிக்க மோடி விரும்பலாம் என்ற இன்னொரு கருத்தும் நிலவுகிறது. கட்சி தலைவர் பதவியை அமித்ஷா விடுவதற்கு ஆர்.எஸ்.எஸ்.,ஸூம் விரும்பாது. ஏனெனில் இந்த ஆண்டு ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)