அம்பும் வம்பும்: லாலு கடித சர்ச்சை

ராஞ்சி : நிதிஷ்குமாரின் அம்பு சின்னம் வன்முறையை விதைக்கிறது. ஆனால், எனது கட்சியின் 'லாந்தர்' விளக்கு சின்னம், இருளை விலக்கி, சகோதரத்துவத்தை வளர்க்கிறது என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

சிறையில் லாலு :கடந்த, 2017 முதல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார், ராஷ்ட்ரிய ஜனதள தலைவர் லாலு பிரசாத் யாதவ். தற்போது அவர், ராஞ்சி ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அங்கிருந்தபடியே, தனது முன்னாள் அரசியல் நண்பரும், தற்போதைய பீகார் முதல்வருமான நிதீஷ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இளைய சகோதரர் :
அதில், '' இளைய சகோதரரான உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்களது அம்பு சின்னம் வன்முறையை குறிப்பிடுவதாக உள்ளது. ஆனால், எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கு அப்படியில்லை.

இருளை விலக்கி மக்களுக்கு ஒளி கூட்டுவது லாந்தர். அத்தோடு அன்பையும், சமாதானம், சகோதரத்துவத்தையும் இயல்பிலேயே அடையாளப்படுத்துகிறது,'' என்றும் குறிப்பிட்டுள்ளார் லாலு. மேலும், உங்களது அம்புக்கு நேரம் முடிந்துவிட்டது. அதனை மியூசியத்தில் வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றும் சாடியுள்ளார்.

அரசியல் கடிதம் :
சிறையிலிருந்தே, பிரசார நோக்கில் இந்த கடிதத்தை லாலு எழுதி உள்ளதாக, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சீனியர் தலைவர்கள், விமர்சித்து உள்ளனர். நிதிஷ்குமார் தற்போது பா.ஜ., கூட்டணியிலும், லாலு காங்கிரஸ் கூட்டணியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)