மாயாவதிக்கு அரசியல் அழுத்தநோய்:பா.ஜ.

லக்னோ : மாயாவதி அரசியல் அழுத்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பதாக பா.ஜ., தலைவரும், உ.பி., துணை முதல்வருமான தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தலின் 2 ம் கட்ட ஓட்டுப்பதிவின் போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உ.பி., முதல்வர் யோகி ஆத்யநாத் உள்ளிட்டோர் தேர்தல் விதிகளை மீறியதாக அவர்கள் பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதித்தது தேர்தல் கமிஷன். ஏப்.,18 ம் தேதி இந்த தடை விலகிய பிறகு பா.ஜ., மற்றும் பிரதமர் மோடியை மிக கடுமையாகவும், சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகவும் விமர்சித்து அவ்வப்போது பேசி வருகிறார் மாயாவதி.

இந்நிலையில் மாயாவதியின் விமர்சனங்கள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த உ.பி., துணை முதல்வர் தினேஷ் சர்மா, மாயாவதி அரசியல் அழுத்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அவர் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்து விடுவார்களோ என்ற பயம் தான் இதற்கு காரணம். அதனால் தான் பொறுமை மற்றும் அமைதி இழந்து தவித்து வருகிறார். அவருக்கு அரசியல் ஆரோக்கிய மருந்து அல்லது பானம் தேவை. தோல்வி பயம் காரணமாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் பேசி வருகிறார் என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)