மத்திய பெண் அமைச்சர் கவுர் தொகுதிக்குள் நுழைய முடியலை

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாபின், 13 தொகுதிகளில், பதின்டாவில் போட்டியிடும், மத்திய பெண் அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல், கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.இந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி.,யான இவர் மீது, தொகுதிக்கு திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி பலமாக
நிலவுகிறது. இதனால், பிரசாரத்திற்கு செல்லும் அவருக்கு, பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.சில நாட்களுக்கு முன், பதின்டா கிராம பகுதிகளில் அவரை நுழைய விடாமல், காங்கிரசார் ரகளையில்ஈடுபட்டனர்.இதனால், அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை; வீட்டுக்கு திரும்பி விட்டார்.கடும் கோபமடைந்த அவர், மாநில, காங்., முதல்வர், அமரீந்தர் சிங்கையும், காங்கிரசாரையும், கடுமையாக சாடினார்.'தொகுதிக்கு பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் அளவுக்கு, காங்கிரசார் அத்துமீறிநடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்குகின்றனர்' என்றார்.இந்த முறை தான் அவர், தன் குடும்ப கட்சியான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சியில் இல்லாத காலத்தில், தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவரின் மாமனார், சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான, பிரகாஷ் சிங் பாதல். கணவர், முன்னாள் துணை முதல்வர், சுக்பிர் சிங் பாதல்.
- எஸ்.சர்மா
-சிறப்பு செய்தியாளர்


sahayadhas - chennai,இந்தியா
13-மே-2019 18:48 Report Abuse
sahayadhas 70 ஆண்டு நன்றாக வாழும் போது தெரிந்திருக்குமே.
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-மே-2019 13:55Report Abuse
Chowkidar NandaIndiaமக்கள் நன்றாக வாழ்ந்திருந்தால் இவர் எப்படி அங்கு வெற்றி பெற்றிருப்பார்? அறுபது வருடங்கள் நாசமாய் போனதால் தானே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தது?...
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-2019 11:34 Report Abuse
தமிழ்வேல் இவங்க எந்த துறைக்கு அமைச்சர்ன்னு சொல்லாட்டி நாங்க எப்புடி தெரிஞ்சிக்கிறது ?
Achchu - Chennai,இந்தியா
13-மே-2019 23:31Report Abuse
AchchuMinistry of Food Processing Industries...
Ambika. K - bangalore,இந்தியா
13-மே-2019 09:10 Report Abuse
Ambika. K நாகர்கோயிலு சுரேஷு என்னவோ காங்கிரஸ் ரொம்ப நல்லவங்க நல்ல ஆட்சி தருவாங்க என்பது போல் உள்ளது உங்க கருத்து
G Mahalingam - Delhi,இந்தியா
13-மே-2019 09:04 Report Abuse
G  Mahalingam போதை பொருள் இன்றும் காங்கிரஸ் ஆட்சியில் அதிக அளவில் உள்ளது. மாமூல் வாங்குவதில் இரு கட்சிகள் ஒற்றுமை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-2019 08:08 Report Abuse
Srinivasan Kannaiya முன்பெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் வாக்குறுதிகள் உட்பட அனைத்தையும் மறந்து விடுவார்கள்... ஆனால் இப்போ அப்ப்டி இல்லை... எல்லாவற்றையும் நினைவில் கொள்ளுகிறார்கள்
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-2019 08:07 Report Abuse
Srinivasan Kannaiya ஐந்து வருடங்கள் கழித்து போவதால் அந்நியனா பார்க்கிறார்கள்
blocked user - blocked,மயோட்
13-மே-2019 04:35 Report Abuse
blocked user சீக்கியர்களை கொத்துக்கொத்தாக கொன்றுவிட்டு இன்று காங்கிரஸ் நாடகம் போடுகிறது..
Nagercoil Suresh - India,இந்தியா
13-மே-2019 03:37 Report Abuse
Nagercoil Suresh இவர்கள் பஞ்சாபில் ஆட்சியில் இருந்தபொழுது செய்த அடாவடித்தனம் மிக அதிகம் எண்று கூறுகிறார்கள்..இளைஞர் சமுதாயத்தையே போதைக்கு அடிமை ஆக்கிவிட்ட கோபத்தில் மக்கள் உள்ளார்கள் அதோடு கூட்டு வைத்திருக்கும் ப ஜ க வுக்கும் பலத்த அடி காத்திருப்பதாக கூறுகிறார்கள்...டாஸ்மாக் சரக்குக்கு ஒருபடி மேலேபோய் விட்டார்கள் போதை பொருள்களில்...
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-மே-2019 08:38Report Abuse
ஆரூர் ரங்போதை பொருள் குற்றச்சாட்டை ராகுலால் இன்றுவரை நிரூபிக்கமுடியவில்லை தமிழகத்தை ஒப்புநோக்கினால் அங்கு போதை பழக்கம் குறைவுதான் ( பொள்ளாச்சி மஹாபலிபுரம் போதை நகர்கள் அங்கில்லை) . நம் குணம் அடுத்தவனை குறைசொல்லி நாமே சமாதானமாவதுதானே?...
pattikkaattaan - Muscat,ஓமன்
13-மே-2019 12:15Report Abuse
pattikkaattaan தமிழ்நாட்டில் பெரும்பாலான கீழ்த்தட்டு மக்கள் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்பது உண்மையே... ஆனால் அதே சமயம் பஞ்சாப் சண்டிகர் போன்ற பகுதிகளில் போதை மருந்து மிக அதிகமாக பழக்கத்தில் உள்ளது என்பதும் உண்மையே .....
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
13-மே-2019 13:27Report Abuse
கல்யாணராமன் சு.பஞ்சாபில் போதை அடிமைத்தனம் இப்போதைய காங்கிரஸ் ஆட்சியிலோ, இல்லை, இதற்கு முன் இருந்த அகாலி தள் ஆட்சியிலோ உருவாகவில்லை ..... இது அதற்கும் முன் பலவருடங்களாக இருந்துவருகிறது ...... பாகிஸ்தானிலிலிருந்து உலக சந்தைக்கு இந்தியா வழியாக கடத்தப்படும் பாதையில் பஞ்சாப் முக்கிய இடம் வகிக்கிறது ......... தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் , அரசு நிறுவனங்களும் கடும் முயற்சி செய்தும் பலன் குறையாகவே உள்ளது ............
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-மே-2019 15:15Report Abuse
pradeesh parthasarathyதற்போதைய இந்தியா டுடே கருத்து கணிப்பின் படி இந்தியாவின் மிக சிறந்த முதல்வர் பஞ்சாப் மாநில முதலமைச்சார் அம்ரிந்தர் சிங்க் ......
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-மே-2019 00:00Report Abuse
கல்யாணராமன் சு.உண்மைதான் ....... ராணுவ வீரரான அவரிடம் கட்டுப்பாடு உள்ளது ...... ராகுல் காந்தியின் உதவியில்லாமலேயே வெற்றி பெற்றார் ......... ஆனால் சித்துவை அடக்கமுடியவில்லையே ..........
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-மே-2019 00:01Report Abuse
கல்யாணராமன் சு.உண்மைதான் ....... ராணுவ வீரரான அவரிடம் கட்டுப்பாடு உள்ளது ...... ராகுல் காந்தியின் உதவியில்லாமலேயே வெற்றி பெற்றார் ......... ஆனால் ஓட்டைவாய் சித்துவை அடக்கமுடியவில்லையே ..........
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)