இவ்வளவு தான் ஹிமாச்சல்...

ஒரே நாளில் மோடி - ராகுல்

நான்கு தொகுதிகளை உடைய ஹிமாச்சலில், வரும், 19ல் தேர்தல்நடக்கிறது. இதற்காக, பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி இன்று, ஷிம்லாவில், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல, காங்கிரஸ் தலைவர், ராகுலும் பிரசாரம் செய்கிறார்.இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம், காங்கிரஸ் பொதுக்கூட்ட தேதியை மாற்றும் படி கேட்டது. ஏனெனில், பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு, பல வாரங்களுக்கு முன்பே அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.காங்கிரஸ் சமீபத்தில் தான், விண்ணப்பித்துள்ளது.எனினும், காங்கிரசார் முடியாது என, மறுத்து விட்டனர்.


காங்., உள்ளடி வேலைஹிமாச்சலில் காங்கிரஸ் கோஷ்டி மோதல், உச்சகட்டத்தை அடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட, டில்லிக்கு சென்று, சகுனித்தன வேலைகளை செய்த காங்கிரஸ் பிரபலங்கள், இப்போது தேர்தல் பிரசாரத்திலும் தங்கள் வேலையை காட்டத் துவங்கியுள்ளனர்.மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர், சுக்விந்தர் சுக்கு, 'சில காங்கிரஸ் தலைவர்கள், பா.ஜ.,வின ருடன் கைகோர்த்துள்ளனர். அவர்கள், ஹமிர்புர், பா.ஜ., வேட்பாளர், அனுராக் தாக்குருக்கு ஆதரவாக, உள்ளடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்' எனக் கூறியுள்ளார்.


அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவரின் எதிரணியினர், 'மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ள அதிருப்தியில், பொய்யான தகவல்களை கூறி வருகிறார்' என, சுக்கு மீது குற்றம்சாட்டுகின்றனர்.


'மாஜி'க்கு ஆசை அதிகம்!


வீரபத்ர சிங்கிக்கு, 84 வயதாகிறது. ஆறு முறை, இந்த மாநில முதல்வராக இருந்துள்ளார். இன்னமும் அவருக்கு பதவி ஆசை விட வில்லை. சமீபத்தில், 'டிவி' ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.


'உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் இன்னமும், 'பிட்' ஆக உள்ளேன். முதல்வர் பதவியில் இன்னும் ஒன்றிரண்டு ரவுண்ட்கள் தொடர்வேன்' என்றார்.இதை கேட்ட அவரின்கட்சியினர் பலருக்கு அதிர்ச்சி. இப்போதே, 84; இன்னும் இரண்டு முறை என்றால், 94 வயது வரைக்குமா... அப்போது நமக்கு எப்போது வாய்ப்பு...' என, கலக்கம் அடைந்துள்ளனர்.

- அஸ்வனி சர்மா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)