'சீக்கிய கலவரம் குறித்த கருத்துக்கு பிட்ரோடா மன்னிப்பு கேட்கணும்'

புதுடில்லி: 'கடந்த, 1984ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து, காங்., மூத்த தலைவர், சாம் பிட்ரோடா கூறியது ஏற்புடையதல்ல; தன் கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, காங்., தலைவர், ராகுல் வலியுறுத்திஉள்ளார்.
காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், இந்திரா, 1984ல், சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில், சீக்கியருக்கு எதிராக, வன்முறை வெடித்தது. இதில், 3,000க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். இதில், காங்.,கைச் சேர்ந்த பல தலைவர்கள் மீது, குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

எதிர்ப்புஇந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், காங்., மூத்த தலைவர், சாம் பிட்ரோடா, சீக்கிய கலவரம் குறித்து குறிப்பிடுகையில், 'நடந்தது, நடந்து விட்டது' என, கூறினார். இதற்கு, பா.ஜ., சிரோன்மணி அகாலி தளம் உட்பட பல கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்.,கைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், 'பிட்ரோடா பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது' என்றார்.

'காங்கிரசின் இந்தக் கருத்து, அந்தக் கட்சியின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.


இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து, காங்., தலைவர், ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:மூத்த தலைவர், சாம் பிட்ரோடா கூறியுள்ள கருத்து ஏற்படையதல்ல. இது தொடர்பாக
அவருடன் பேச உள்ளேன். தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்.சீக்கியருக்கு எதிராக நடந்த வன்முறை, மிகவும் கொடூரமானது. இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான், காங்.,கின் நிலைப்பாடு.இந்த வன்முறை நடந்ததற்கு, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், மன்னிப்பு கேட்டு உள்ளார். என்னுடைய தாயும், கட்சியின் முன்னாள் தலைவருமான, சோனியாவும், இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சம்பவம்கடந்த, 1984ல் நடந்த அந்த கொடூர சம்பவத்தில், கட்சியின் நிலைப்பாட்டை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். இனி, இது போன்ற ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், தன் கருத்து குறித்து, சாம் பிட்ரோடா அளித்துள்ள விளக்கம்:நடந்த சம்பவம், ஒரு மோசமான சம்பவம் என்பதை கூற நினைத்தேன். அந்த சம்பவத்தில் இருந்து விடுபட்டு,நம்முடைய பயணம் தொடர வேண்டும். கடந்த, 1984ல் நடந்தது குறித்து தற்போது, பா.ஜ., தேவையில்லாமல் பேசுகிறது. நமக்கு முன், பல பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்போம் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறினேன். ஆனால், அது தவறாக புரிந்து
கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

விதிமீறல் இல்லைசமீபத்தில், மத்திய பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய, காங்., தலைவர் ராகுல், 'பழங்குடியினர் தொடர்பான ஒரு புதிய சட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. 'அதன்படி, பழங்குடியினரின் நிலம் உள்ளிட்ட உரிமைகளை பறிப்பதுடன், அவர்களை சுட்டுக் கொல்லவும் முடியும்' என்று கூறினார்.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாக, ராகுலுக்கு தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பிஇருந்தது. அதற்கு அளித்துள்ள பதிலில், ராகுல் கூறியுள்ளதாவது:தேர்தல் ஆணையம், நேர்மைஆகவும், நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடந்து கொள்ள வேண்டும். பழங்குடியினர் குறித்த என்னுடைய பேச்சு, தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை. அரசின் திட்டங்கள், சட்டங்கள் குறித்த கருத்தாகவே, அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிரசாரத்தின்போது, ஹிந்தியில் பேசும்போது, அந்த வேகத்தில் இந்த கருத்தை கூறியுள்ளேன்.இது அரசியல் ரீதியிலான பேச்சு. இதில், அரசு குறித்தோ, தனிப்பட்ட நபர் குறித்தோ திட்டமிட்ட விமர்சனம் இல்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)