நாடு பிரிவினைக்கு நேரு காரணம் : பா.ஜ., வேட்பாளர் பேச்சு

புதுடில்லி: முகமது அலி ஜின்னாவை பிரதமராக அறிவித்திருந்தால் இந்தியா பிரிவினை அடைந்திருக்காது என ம.பி., மாநில பா.ஜ., வேட்பாளர் குமன்சிங் தோமர் கூறி உள்ளார்.



நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 6-வது கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ம..பி, மாநிலத்தில் உள்ள ரத்லம் தொகுதியில் பா.ஜ., சார்பில் குமன்சிங்தோமர் என்பவர் போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கூறியதாக ஏ.என். ஐ., வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது:




நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில், பிரதமர் பதவியில் அமர்வதில், நேரு பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால், நாடு பிரிவினையை சந்தித்திருக்காது. முகமது அலி ஜின்னா வழக்கறிஞர். நன்கு படித்தவர். ஜின்னாவை பிரதமராக்க முடிவு செய்திருந்தால், நாட்டில் பிரிவினை ஏற்பட்டிருக்காது. பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)