ஜாதி அரசியல் செய்கிறது பா.ஜ., : அகிலேஷ் ஆவேசம்

புது டில்லி: உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ., ஜாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுவரை 5 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. நாளை 6வது கட்ட தேர்தலும், வரும் 19ம் தேதி 7ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், ''பா.ஜ.,வினர் அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். மேலும் பா.ஜ., ஜாதி அரசியல் செய்து வருகிறது. இவர்களின் ஆட்சி வெவ்வேறு சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. இவர்கள் ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் வைத்தே இயங்குகிறது.
மற்ற கட்சியினருக்கு ரெட் கார்ட் வழங்குவதன் மூலம் பாஜக வெற்றி பெற முயல்கிறது. சமாஜ்வாடி கட்சியினருக்கு ரெட் கார்ட் கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளனர்.

எனவே தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியினர் பலர் ரெட் கார்ட் வாங்கியுள்ளனர். வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல் எங்கள் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளோம்.

எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை தவிர, பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் சரியானவர்களா? ஒருவர் கூட குற்றம் புரிந்தவர் இல்லையா? பாஜக, தாங்கள் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

வரவிருக்கும் 6ம் கட்ட தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியாது. 7ம் கட்ட தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் தான் வெற்றி பெறும்,'' இவ்வாறு அவர் கூறினார். உத்தரபிரதேசத்தில் பிற்பட்ட சமூக ஜாதிய அடிப்படையில் அரசியல் செய்து வருவதாக காலங்காலமாக சமாஜ்வாதி மீதும், தலித் ஜாதிகளுக்காக மாயாவதியும் அரசியல் செய்வதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜாதி அரசியல் செய்து வருவதாக பா.ஜ., மீது அகிலேஷ் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)