பிரசாரத்திற்கு டூப்ளிகேட்டை பயன்படுத்திய காம்பீர்

புதுடில்லி : வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக டில்லி கிழக்கு லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளரான கவுதம் காம்பீர் டூப்ளிகேட்டை நபரை பயன்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இத தொடர்பான போட்டோ ஒன்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துண்டுசீட்டு பிரசாரம் விவகாரம் தொடர்பாக டில்லியில் பா.ஜ., - ஆம்ஆத்மி இடையே ஏற்கனவே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கவுதம் காம்பீர் சார்பில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம்ஆத்மி தலைவர்களுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதிலுக்கு ஆம்ஆத்மியும் கவுதம் காம்பீர் மற்றும் பா.ஜ.,வுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விவகாரத்தை காம்பீரை ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள காம்பீர், தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகிக் கொள்வதாக கூறியுள்ள காம்பீர், நிரூபிக்க தவறினால் ஆம் ஆத்மி தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் கவுதம் காம்பீர் பிரசாரம் செய்யும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காரின் முன்புறம் கவுதம் காம்பீர் அமர்ந்திருப்பது போன்றும், அதே காரின் பின்புறம் திறந்து வாகனத்தில் காம்பீரை போன்ற ஒருவர் வாக்காளர்களை பார்த்து கும்பிட்டு, ஓட்டு கேட்பது போலவும் உள்ளது.
அத்துடன் சிசோடியா பதிவிட்டுள்ள டுவீட்டில், டூப்ளிகேட் நபரை சினிமாக்களின் சண்டைக் காட்சியின்போது பயன்படுத்துவார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். கிரிக்கெட்டில் ரன் எடுக்க ஓட முடியவில்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு உதவியாக ரன்னர் ஒருவரை பயன்படுத்துவார்கள். ஆனால் முதன் முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு டூப்ளிகேட் ஒருவர் பயன்படுத்தப்படுவதை டில்லியில்தான் பார்க்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். டில்லி அரசியலில் இது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)