பா.ஜ., பணப்பெட்டிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு : மம்தா

கோல்கட்டா : பா.ஜ., தலைவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்புடன் பணப் பெட்டிகளை எடுத்துச் சென்று, ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். பர்கானாஸ் மாவட்டம் அசோக்நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா, நேற்று பா.ஜ., வேட்பாளர் ஒருவரின் காரில் இருந்து ரூ.1,13,895 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்றும், இசட் பிளஸ், ஒய் பிளஸ், பா.ஜ., பிளஸ் பாதுகாப்பு வைத்திருக்கும் பா.ஜ., தலைவர்கள் பலர் தங்களின் பாதுகாப்பு அந்தஸ்தை பயன்படுத்தி போலீஸ் வாகனத்திலேயே கட்டுக்கட்டாக பணம் அடுக்கப்பட்டுள்ள பெட்டிகளை கொண்டு செல்கின்றனர்.தேர்தல் முன்பு, சமூக விரோத சக்திகளுக்கு பணம் கொடுத்து ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற சொல்லி உள்ளனர். இது தேர்தலா? பிரதமர் இருக்கும் இடத்தில் ஏன் எந்த பத்திரிகையையோ அல்லது தேர்தல் கமிஷன் போட்டோகிராபரையோ அனுமதிக்கவில்லை? ஒருநாள் ஒரு பெட்டி எடுத்துச் செல்லப்பட்டதாக ஒரே ஒரு போட்டோ மட்டும் வெளிவந்தது. பா.ஜ., தலைவர்களால் அது போன்று எத்தனை பெட்டிகளில் எவ்வளவு பணம் மேற்குவங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது என யாருக்கு தெரியும்?மேற்குவங்கத்தில் உங்களால் பணப்பெட்டிகளை கொண்டு தேர்தல் நடத்த முடியாது. எந்த தலைவர் எங்கு பணப்பட்டுவாடா செய்தாலும் நாங்கள் பிடிப்போம். இரவில் பண பட்டுவாடா செய்தாலும் விழித்திருந்து பிடிக்கும்படி கூறி உள்ளேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் இரவுகளில் பணம் கொடுக்க துவங்கி விட்டனர். பணம் நிரப்பப்பட்ட கார்கள் எங்கும் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்றார். மம்தாவின் இந்த குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள பா.ஜ., தலைவர்கள், தோல்வி பயத்தில் மம்தா இவ்வாறு பொய்களை கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)