மறுதேர்தல் ஓட்டுப்பதிவுகமல் யோசனை

சென்னை, மே 11-

''மறுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் தேர்தல் முடிந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது'' என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:தேர்தல் கமிஷன் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. தற்போது மறுதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் தேர்தல் முடிந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தல் மகிழ்ச்சி



கோவை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நீதி மையத்துக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. கட்சியின் பல்லடம் பகுதி நிர்வாகி பாலமுருகன் மரணத்துக்கு கட்சியினர் யாரும் செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இடைத்தரகர்கள் புகுந்து தங்களிடம் காசு கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)