எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராகுல்:கெஜ்ரிவால்

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும், ஓட்டுக்களையும் பிரிக்கும் வேலையை காங். செய்கிறது. இது பா.ஜ.வுக்கு சாதகமான சூழ்நிலைக்கு வழி வகுக்கும் என கெஜ்ரிவால் காங்.கை குற்றம்சாட்டினார்.

லோக்சபா தேர்தலையொட்டி பிரசாரம் செய்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டி, பா.ஜ.வுக்கு எதிராக செயல்படும் கட்சிகளான உ.பி.யில் சமாஜ்வாதி பகுஜன் ஓட்டுக்களையும், கேரளாவில் இடதுசாரி ஓட்டுக்களையும், ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி ஓட்டுக்களையும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங். ஓட்டுக்களையும் பிரிக்கும் வேலையை காங்.செய்து வருகிறது.எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காங்.தலைவர் ராகுல் சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மத்தியில் மீண்டும் பா.ஜ. ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால் அதற்கு ராகுல் தான் காரணமாவார். ஒட்டு வங்கிக்காக ராணுவத்தையும், ராணுவ வீரர்களையும் மோடி பயன்படுத்துவது சரியல்ல என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)