ராகுல் முன்னிலையில் இணையலாம் வாங்க! த.மா.கா.,வினருக்கு, கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: 'த.மா.கா.,வினர், பா.ஜ.,வில் இணைவது, தற்கொலைக்கு சமம்; எனவே, அனைவரும், ராகுல் முன்னிலையில் இணைய வாருங்கள்' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன், த.மா.கா.,கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த முடிவை, த.மா.கா., தொண்டர்கள் ஏற்கவில்லை. காமராஜர், மூப்பனார் தலைமையில் செயல்பட்டவர்கள், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதை ஏற்க மாட்டார்கள். காங்கிரசை விட்டு, மூப்பனார் விலகினாலும், காங்கிரசுக்கு எதிராக, எப்போதும் செயல்பட்டதில்லை. அவரது கனவிலும், காங்., எதிர்ப்புணர்வு வந்தது கிடையாது.

அந்த அளவுக்கு, காங்., மீதும், நேரு பாரம்பரிய தலைமை மீதும் அளவற்ற பற்றும், நம்பிக்கையும் உடையவர் மூப்பனார். கடந்த, 1999ல், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அந்த அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்த போது, த.மா.கா., - எம்.பி.,க்களான, சிதம்பரம், டென்னிஸ், கிருஷ்ணமூர்த்தி மூவரையும், காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க வைத்தார் மூப்பனார்; பா.ஜ., ஆட்சி அகற்றப்பட்டது.

இதை, இன்றைய, த.மா.கா.,வினர் உணர வேண்டும். த.மா.கா.,வினர், பா.ஜ.,வில் இணைவது, தற்கொலைக்கு சமம். கருத்து வேறுபாடு காரணமாக, தற்காலிகமாக வெளியேறி இருந்தாலும், திரும்ப வருவதற்கான வாய்ப்புகள், உங்களுக்காக காத்திருக்கின்றன. சத்தியமூர்த்தி பவன் கதவுகள் திறந்திருக்கின்றன; ராகுல் முன்னிலையில் இணைய வாருங்கள்; இரு கரம் கூப்பி அழைக்கிறேன். இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)