கடைசி நொடி வரை பணியாற்றுங்கள்; கட்சியினருக்கு அ.தி.மு.க., கடிதம்

சென்னை: 'அரசைக் கவிழ்ப்போம் என்று, கொக்கரிக்கிற கயமையை வேரோடு வீழ்த்தி, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கடைசி நொடி வரை, இடையறாது பணியாற்ற வேண்டும்' என, கட்சியினருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கட்சியினருக்கு, அவர்கள் எழுதியுள்ள கடிதம்:நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும், தங்கள் முகமூடியை கிழித்து விட்டு, 'அ.தி.மு.க., ஆட்சியைக் கலைப்போம்' என்ற, ஒருமித்தகுரலோடு, நம் முன் நிற்கின்றன. அ.தி.மு.க., தொண்டர்களின் உதிரத்தையும், உழைப்பையும், உறிஞ்சி கொழுத்தவர்கள், இன்று விரோதிகளோடு சேர்ந்து, 'ஜெ., அரசை வீழ்த்துவோம்' என்று கொக்கரிக்கின்றனர்.

அவர்களை வென்று, அ.தி.மு.க.,வை ஒழிக்க நினைத்தவர்கள், ஒரு நாளும் காலுான்றி நிலைத்ததில்லை என்பதை, மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். ஜெ., அரசை அழிப்போம் என்று, கொக்கரிக்கிற கயமையை, வேரோடு வீழ்த்த, நான்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு, ஓட்டுப்பதிவின் கடைசி வினாடி வரை, இடையறாது பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)