ஆளுங்கட்சிக்கு சாதகமானதா தேர்தல் கமிஷன் : ஓ.பி.எஸ்., பதில்

சென்னை : தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் கூறுகையில், '' நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் சார்பில் தொடர்ந்து விலக்கு கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரம், தற்போது ஆளுநர் பரிசீலனையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் ஆளுநர் தான் இந்த விசயத்தில் முடிவெடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசும் மீண்டும் விடுவிக்ககோரி வலியுறுத்தும்,'' என்றார்.

மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., ''தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. அது சுடே்சையான அமைப்பு. தேர்தல் கமிஷனுக்கு தனி அதிகாரங்கள் உண்டு,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)