பெண்களை புறக்கணிக்கும் ஹரியானா

ஆண்- பெண் விகிதாச்சாரத்தில், பெண்கள்மிகக் குறைவாக இருக்கும் மாநிலமாக, ஹரியானா விளங்குகிறது.கட்டுப் பெட்டியாக பெண்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, 'காப்' பஞ்சாயத்துகள் எனப்படும், கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கும், ஜாதி பஞ்சாயத்துகள் நிறைந்தது
இந்த மாநிலம்.அதுபோல, பெண்கள் உடல் முழுதும் போர்த்திய படி தான், ஆடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இங்கு அதிகம்.இது போன்ற பல காரணங்களால், இந்த மாநிலத்தில் பெண் வேட்பாளர்களும், பெண்,எம்.பி.,க்களும் வெகு குறைவாகவே உள்ளனர்.கடந்த, 1966ல் உருவாக்கப்பட்ட இந்த மாநிலத்தில், இதுவரை நடந்துள்ள, 13 லோக்சபா தேர்தல்களில், ஒன்பது முறை தான் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, 128 எம்.பி.,க்கள் இந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில், 7 சதவீதம் பேர் தான் பெண்கள்.பெண்கள், 78 முறை போட்டியிட்டுஉள்ளனர்; ஆனால், 60முறை, 'டிபாசிட்' இழந்துள்ளனர். அதில், 1984ல் தான் நிலைமை ரொம்ப மோசம். பா.ஜ.,வின் சுஷ்மா ஸ்வராஜ் உட்பட அனைத்து, 10பெண்களும், டிபாசிட் இழந்தனர்.

கடந்த, 2014 தேர்தலில், போட்டியிட்ட, 11 பெண்களில், 10 பேர், டிபாசிட்டை பறி கொடுத்தனர்.இந்த மாநிலத்திலிருந்து, லோக்சபா தேர்தலுக்கு போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமையை, 1967ல், காங்கிரசின், பி.வதி பெற்றாலும், அவரால் வெற்றி பெறவில்லை. 1971 தேர்தலில், ஒரு பெண் கூட போட்டியிடவில்லை. 77ல் தான், முதல் பெண்ணாக, பாரதிய லோக் தளத்தின் சந்தி ரவாதி, எம்.பி.,யானார்.பெண்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என, பெரும்பாலானோர் கருதுவதால், பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுவதும் இல்லை.

எனினும், காங்கிரசைச் சேர்ந்த, குமாரி செல்ஜா, நான்கு முறை, எம்.பி.,யாகியுள்ளார். கைலாஷ் தேவி என்பவர், இரண்டு முறை வென்றுள்ளார். பா.ஜ.,வின் சுதா யாதவ், 1999லிலும்; 2009ல், காங்கிரஸ் முன்னாள் முதல்வர், பன்சிலாலின் பேத்தி, சுருதி சவுத்ரியும் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த முறை, குமாரி செல்ஜா, சுருதி சவுத்ரி மற்றும் சுனிதா துக்கால் ஆகிய மூவர் தான்,பெரிய கட்சிகளின் பெண் வேட்பாளர்கள். - ஸ்மிருதி சர்மா -சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)