மோசமாக விமர்சித்த, பா.ஜ.,:ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் அதிஷி, குற்றம் சாட்டு

புதுடில்லி:''என்னை மோசமாக விமர்சித்து, பா.ஜ., துண்டுச் சீட்டுகளை வினியோகித்துள்ளது,'' என, கிழக்கு டில்லி தொகுதியின், ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் அதிஷி, குற்றம் சாட்டிஉள்ளார்.டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும், வரும், 12ல் தேர்தல் நடக்கிறது.கிழக்கு டில்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில், அதிஷி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், முன்னாள் கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.இந்நிலையில், டில்லியில், அதிஷி கூறியதாவது:பெண் என்று கூட பாராமல், என்னையும், என் குடும்பத்தையும் மோசமாக விமர்சித்து, பா.ஜ., துண்டுச் சீட்டு வெளியிட்டுள்ளது. இது, பா.ஜ., வேட்பாளர் கவுதம் கம்பீரின் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ளது.கவுதம் கம்பீர் அரசியலில் நுழைந்த போது, அவரை வரவேற்றவள் நான். ஆனால், அவர் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவார் என, நான் நினைக்கவில்லை.கவுதம் கம்பீர், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டால், கிழக்கு டில்லியில் உள்ள லட்சக்கணக்கான பெண்களின் கதி என்ன ஆகும்?இவ்வாறு, அதிஷி கண்ணீர் மல்க கூறினார்.இந்த விவகாரம் குறித்து, முதல்வர் கெஜ்ரிவால், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'கவுதம் கம்பீர், இவ்வளவு மோசமாக நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இவரை போன்றவர்கள், எம்.பி.,யானால், பெண்களின் நிலை என்னவாகும்' எனக் கூறியுள்ளார்.கம்பீர் சவால்அதிஷி கூறியுள்ள குற்றச்சாட்டை, கவுதம் கம்பீர் மறுத்துள்ளார்'டுவிட்டரில்' அவர் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:கெஜ்ரிவால் போன்றவர்கள், டில்லிக்கு முதல்வராக உள்ளது வெட்கக்கேடு. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தன் கட்சியின் பெண் வேட்பாளரை, கெஜ்ரிவால் தரக்குறைவாக விமர்சித்து, துண்டுச் சீட்டு வெளியிட்டுள்ளார்.கெஜ்ரிவாலின் அழுக்குபடிந்த சிந்தனையை, அவரது கட்சி சின்னமான, விளக்கமாறால் சுத்தம் செய்ய வேண்டும்.நான் தான் துண்டுச் சீட்டை வெளியிட்டேன் என்பதை நிரூபித்தால், அடுத்த நிமிடம், தேர்தலில் இருந்து விலகி விடுகிறேன்; இல்லாவிடில், கெஜ்ரிவாலும், அதிஷியும், அரசியலில் இருந்து விலக வேண்டும்.இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)