போர்க்கப்பலில் ராஜிவ் உல்லாசம்: முன்னாள் அதிகாரி மறுப்பு

புது டில்லி : இந்திய நாட்டின் கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., விராத்-ஐ உல்லாசப் பயணத்திற்காக பயன்படுத்தினார் முன்னாள் பிரதமர் ராஜிவ். அதில், தனது வெளிநாட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதனை முன்னாள் கடற்படை வைஸ் அட்மிரல் வினோத் பஸ்ரிச்சா மறுத்துள்ளார்.

இவர் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, லட்சத்தீவுகளுக்கு சென்ற ஐ.என்.எஸ், விராத் கப்பலின் கேப்டனாக இருந்தவர். அவர், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ராஜிவ் பிரதமராக இருந்தபோது அலுவல் பயணமாகத் தான் போர்க்கப்பலில் சென்றார்.
அவரும் அவரது மனைவி சோனியா தவிர வேறு வெளிநாட்டவரோ, அவரது நண்பர்களோ அதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதேபோல, நேருவுடன் தான் இதேபோல ஹாங்காங் பயணம் சென்றதையும் கூட நினைவு கூர்ந்துள்ளார் . மேலும், ராணுவ ஹெலிகாப்டரில் ராஜிவ், சோனியா பயணித்தனர். ராகுல் அப்போது வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி பேசுகையில், ராஜிவ் பிரதமராக இருந்தபோது கடற் பிராந்தியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐ.என்.எஸ்.விராத் கப்பலை தனது சொந்த டாக்ஸி போல பயன்படுத்தினார். விடுமுறை தின சுற்றுலா வாகனம் போல மாற்றிவிட்டார். அவரது வெளி நாட்டு நண்பர்களும் அதில் இருந்தனர். ராஜிவ் தேசத்தின் பாதுகாப்பை பற்றி அக்கறைப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்துதெரிவித்த கடற்படை அதிகாரிகள் சிலர், பிரதமர் மட்டுமின்றி சந்திரபாபு நாயுடு போன்ற பதவியில் உள்ள முதல்வர்கள் சிலரும் போர்க்கப்பல்களில் பயணிப்பது வழக்கம் தான் என்று தெரிவித்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)