புலம்பும் குமாரசாமி; குழம்பும் காங்.,

புதுடில்லி: கர்நாடகா முதல்வர் குமாரசாமிக்கு எதிராக காங்., எம்.எல்.ஏ.,க்கள் நிறைய பேர் கொடி துாக்குவதால், விரைவில் அவரை காங்., கழற்றிவிடும் என்று தெரிகிறது.கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (ம.ஜ.த.,) தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி, ஆதரவு தெரிவித்து வருகிறது காங்., குமாரசாமிக்கும் காங்., தலைவர்களுக்கும் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. எனவே அவரை தேர்தலுக்குப் பிறகு கழற்றிவிட காங்., முடிவு செய்துள்ளது.


2014 தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 17 இடங்களில் பா.ஜ.,வும் 9ல் காங்.,கும் 2 இடங்களில் ம.த.ஜ.,வும் வெற்றி பெற்றன. இம்முறை எப்படியும் 22 இடங்களில் வெற்றி பெற்று விடலாம் என்று பா.ஜ., நம்புகிறது. காங்.,கிற்கு தோல்வி ஏற்பட்டால் கர்நாடகாவில் ம.ஜ.த., - காங்., கூட்டணியிலும் ராகுல் மாற்றத்தை கொண்டு வருவார் என்கின்றனர்.ஏற்கனவே, காங்., தலைவர் சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கின்றன.குமாரசாமி அமைச்சரவையில் உள்ள உள்துறை அமைச்சர் பாட்டீல் மற்றும் திறன் துறை அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோர், மாநில நலனுக்காக சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.


இது குறித்து காங்., தலைமையிடம் குமாரசாமி அதிருப்தியை தெரிவித்தார். மாநில காங்., தலைவர் குண்டுராவிடம், ‛‛சில அமைச்சர்கள் இப்படி பேசுவதை மூத்த தலைவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. தனது ஆதரவாளர்களின் வாயை சித்தராமையா ஏன் அடைக்க மாட்டேன் என்கிறார்'' என்று பொறுமி தள்ளிவிட்டார்.

‛‛நீங்கள் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வர். கவலையே படாதீர்கள். வேறு கேள்விக்கே இடமில்லை'' என்று கூறி குமாரசாமியை அமைதியாக்கி உள்ளார்.

சித்தராமையாவை குமாரசாமி நம்ப மறுப்பது ஏன்சித்தராமயைாவையும் அவரது ஆதரவாளர்களையும் குமாரசாமி நம்ப மறுக்கிறார். மாண்ட்யா தொகுதியில் போட்டியிட்ட தனது மகன் நிகிலை தோற்கடிக்க சித்தராமையா வேலை பார்த்ததாக குமாரசாமி சந்தேகப்படுகிறார். இங்கு பா.ஜ., ஆதரவுடன் நிகிலை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டார்.மீண்டும் முதல்வர் ஆகும் ஆசையை வெளியிட்டுள்ளார் சித்தராமையா. ‛‛நான் முதல்வரானால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவேன்'' என்றும் கூறி உள்ளார்.இது குமாரசாமி காதுக்கு சென்று விட்டது. இதுவும் அவரை சங்கடப்படுத்தி உள்ளது. ‛‛தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விடுகிறது காங்.,'' என்று நினைக்கிறார் குமாரசாமி.


இது பற்றியெல்லாம் சித்தாராமையா கவலைப்படவில்லை. ‛‛மற்றவர்கள் கூறுவதற்கு நான் என்ன செய்ய முடியும். முதல்வர் பதவி காலியாக இல்லை. நான் எப்படி முதல்வராக முடியும். என் மீதுள்ள பிரியத்தால் சிலர் இவ்வாறு பேசுகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது'' என்று கூறி, குமாரசாமியின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)