நேரத்தை வீணடிக்கும் பிரியங்கா : கெஜ்ரிவால்

புதுடில்லி : உ.பி.,யிலும், டில்லியிலும் பிரசாரம் செய்து பிரியங்கா நேரத்தை வீணடித்து கொண்டிருப்பாக டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா நேற்று டில்லியில் காங்., வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். அவர் பிரசாத்தை முடித்த சிறிது நேரத்திலேயே கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரியங்கா அவரது நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார். ராஜஸ்தானிலும் ம.பி.,யிலும் அவர் ஏன் பிரசாரம் செய்யவில்லை? உ.பி.,யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகளையும், டில்லியில் ஆம்ஆத்மி கட்சியை எதிர்த்துள் தான் அவர் பிரசாரம் செய்கிறார். பா.ஜ., - காங்., நேரடி மோதல் இருக்கும் இடங்களுக்கு பிரியங்காவோ அவரது சகோதரரோ செல்வதில்லை. அந்த இடங்களை அவர்கள் தவிர்த்து வருகிறார்கள் என்றார்.டில்லியில் காங்., உடன் கூட்டணி அமைக்க அக்கட்சி தலைவர்களுடன் இடைவிடாது பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் கெஜ்ரிவால். ஆனால் கடைசி நிமிடத்தில் ராகுல் பின்வாங்கியதால், கூட்டணி அமையாமல் போனது. இதனையடுத்து சமீப காலமாக காங்., தலைமை மற்றும் அக்கட்சி தலைவர்களை ஆம்ஆத்மி கட்சியினர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். வட மேற்கு டில்லி லோக்சபா தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளர் குகன் சிங் பிரசாரத்தின் போது பேசுகையில், டில்லியை பொருத்தவரை காங்., போட்டியிலேயே இல்லை. இங்கு போட்டி ஆம்ஆத்மி.,க்கும் பா.ஜ.,வுக்கும் தான் என தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)